பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 யார் எந்த வேதாந்தம் பேசினாலும், தங்களை அடக்கி யொடுக்கி நசுக்குகிறவர்களிடத்தில், தங்களுடைய சுதந்தி ரத்தையும் உரிமைகளையும் மிதித்துத் துவைக்கிறவர்களி டத்தில், தங்களுடைய குடும்பத்தைப் பட்டினி போட்டுக் கால்லுகிறவர்களிடத்தில், பகை பரிசுத்தமான பகை-- ணங்களை நீக்கி) சுரண்ட டப்பட்டு நசுக்கப்பட்டுக் கிடக்கிற வர்க்கத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்படாதி ருக்க முடியாது. இந்தப்பகை ஒழிய வேண்டுமானால், சுரண்டுதலும் அடக்குதலும் ஒழிய வேண்டும், சுதந்திரத் தைப் பறிப்பது ஒழியவேண்டும், பட்டினியும் வேலை யில் லாத் திண்டாட்டமும் ஒழியவேண்டும். இவைகள் ஒழிய வேண்டுமானால் வர்க்கங்களே இல்லாமல் ஒழிந்து தீர வேண்டும். ஒன்றுக் கொன்று விரோதப்பட்டுள்ள இந்த வர்க்கங் களின் அமைப்புகள், பற்பல ரூபங்கள் எடுக்கின்றன. தொழிலாளி முதலாளியை சாக்குவாக்கில் சந்து பொந்துக ளில் நையப் புடைப்பதும், குடியானவன் ஜமீன்தாரை குத் திக் குடலைப் பிசுக்கிக் கொல்லுவதும் வர்க்கப் போராட்டத் தின் போக்கில் தாறுமாறும் அநாகரீகமும் கொண்ட ரூபங் கள். தனித்தனியாக ஒரு முதலாளியையோ அல்லது ஒரு ஜமீன்தாரையோ தாக்குவதால் அல்லது கொல்லுவ தால் மாத்திரம் தங்களுடைய உரிமைகளையும் பாத்யதை களையும் பெற முடியாதென்று உணர்கிற பொழுது, சுரண் டப்பட்ட வர்க்கத்தார், சங்கங்களை அமைத்து ஸ்தாபன ரீதியாகத் தங்களுடைய இயக்கத்தை நடத்தத் தொடங்கு கிறார்கள். இந்த வர்க்க சங்கங்கள், சுரண்டப்பட்ட வர்க்