பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

9


காதலின் பெருங் குணத்தை நான் கண்டேன் ஈண்டு. என் இச்சைக்கினியாளைப் பச்சைக் கிளியுடன் பேசி ஏங்கிட விட்டுப் பாவியேன், பரிதவித்தேன். தெளிந்த நீர் தழுவிச் செல்லும் மணற்கரையிலே, பெண்மான் படுத்துறங்கக், கனிவுடன் காவல்புரியும் ஆண்மானைக் கண்டேன். அதன் பெருந் தன்மையினைக்கண்டு எனது நெஞ்சம் தளர்ந்துளது. அறுகு அருந்தச்செய்து, அருவியோரத்தில் அழகுறத் தூங்கச் செய்து, ஆண்மான், துயிலும் தன் பெண் மானுக்குத் துணைநிற்பது கண்டேன்; என் துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது; என் துடியிடையாளை நான் தனியே தவிக்கவிட்டேன். அவள் தத்தையைக் கேட்கிறாள், 'இன்று அவர் வருவாரோ, கூறு' என்று. அந்த மனைக்கு விரைந்து சென்று, அவள் துயர் தீர்த்துத், தளர்ந்த என் நெஞ்சும் இன்பம்பெறச் செய்யவேண்டும். வேகமாகத் தேர் செலுத்தும் திறமையுடைய பாகனே! தேரை, விரைந்து செலுத்து!!”

வினைமுற்றிய தலைவன் தேர்ப்பாகனுக்குரைத்தது, நான் மேலே தீட்டியிருப்பது. மதுரை மருதன் இளநாகனார் எனும் புலவர் பெருமானின் மணிமொழியினை, கொழித்தெடுத்துக் கோத்தேன், சிறு சொல்லாரம்.

தலைவியைப் பிரிந்து, தலைவன் சென்றான். தத்தளித்தாள் தளிர்மேனியாள். தத்தையிடம் பேசித் தவித்துக் கிடந்தாள். சென்றவிடம் சிறப்புப்பெற்று, தேரிலே மீள்கிறான் தலைவன். மானினத்தினிடம் காதற் பாடம் காண்கிறான்; மங்கைநல்லாளை எண்ணி ஏங்குகிறான்; அவள் மனையிலேயும், அன்னங்கள் காதற்-