பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

21


என்றே நான் திகைக்கிறேன். எனவே, சர் சண்முகம், எந்த வர்ணாசிரமம் ஒழிந்தால் மட்டுமே, நாடு மீளும் என்று கூறினாரோ, அந்த வர்ணாசிரம ஒழிப்பையே, வாழ்க்கை இலட்சியமாகக் கொண்ட திராவிடக் கட்சியிலே, இன்றே பங்கு எடுத்துக்கொண்டு பணிபுரிய வேண்டுகிறோம். இன்று அதன் பாரத்தைச். சுமந்து, பெரியார், உடல் தளர்ந்து, நோய்வாய்ப்பட்டு, படுத்த வண்ணம், பல எண்ணிச் சிலமட்டுமே வெளியே கூறிச் சோகித்தவண்ண மிருக்கிறார். வைத்தியர்கள் மருந்தூட்டுகின்றனர். கட்சியோ அவருக்கு நோயூட்டுகிறது. ஓய்வு இல்லை; மனநிம்மதி இல்லை, ஒன்றா இரண்டா அவருக்குள்ள தொல்லை. உண்மையியேயே. வாலிபமும் வீரமும் அறிவும் ஆற்றலுமிக்க, சர் சண்முகம் போன்றவர்கள், கட்சியிலே பணிபுரியா திருப்பது கண்டு அவர் மனம் நோகாதா என்று கேட்கிறேன். கிளைகளை ஓடித்தெடுத்துவிட்டால், மரத்திற்குத்தான் என்ன அழகு ? ரோஜாவைப் பறித்துக் கொண்டு செடியிலே முள்ளைமட்டும் வைத்திருப்பதுபோலப், பதவியும், சுகவாழ்வும், பலரைப் பறித்துக்கொண்டுபோகச், சுயநலமிகளும் சொல்லம்பரும் ஒரு கட்சியிலே இருந்து பயன் யாது ?

சர் சண்முகம், அமெரிக்கா சென்று திரும்பி எவ்வளவு காலமாயிற்று ! ஈரோடு மகாநாட்டிலே முன்னம், கொச்சித்திவானாக இருந்தகாலை, சர் சண்முகம் வந்திருந்தார். "இன்று நம்மிடை ஓர் விருந்தாளி வந்திருக்கிறார்" என்று பெரியார் உரைத்தார். அதற்குச் சர் சண்முகம் விடுத்த பதிலின் போது, அவர் மனம், முகத்திலே தாண்டவமாடக் கண்டேன்;