பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வர்ணாஸ்ரமம்


"வந்திருப்பது விருந்தாளியல்ல, (குடும்பத்து மகன்), வேற்றூர் சென்று வாழுபவன், விழாநாளன்று வீடு வந்திருக்கிறான், குடும்பத்தினருடன் கூடிக்குலவ, களித்து இருக்க, கனிவுடன் பேச"-என்று சர்.சண்முகம் கூறினார். அஃதன்றோ தமிழ்ப்பண்பு, அதனை யன்றோ நாம் விரும்புவோம்! ஆனால், அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு, இதுவரை (இடையே ஓர் நாள் கன்னிமாரா ஓட்டலிலே பேசினது தவிர) சர் சண்முகம், குடும்பத்தாரைக் கண்டு குசலம் விசாரித்திருக்கக் கூடாதா, கூடிப்பேசிக் குலவிடலாகாதா, தள்ளாடும்போது கைகொடுத்திருக்கவாகாதா, தன் ஆற்றலெனும் செல்வத்தைத்தந்திருக்கக் கூடாதா? ஏன் அதைச் செய்யத் தவறினார்? பாகப் பிரிவினை ஏற்பட்டு விட்டதா ! குடும்பத்தின் உயர்வு தாழ்வு பற்றிக் கருதிடாத உதவா மகனா அவர்! இதுவே, என்னை வாட்டி வதைப்பது. இசைச் செல்வத்தை வளர்த்திடவும், கலைச்செல்வத்தைக்கண்டு கண்டு களிக்கவும், சர் சண்முகம் ஓயவில்லை. ஆனால் குடும்பத்தையே மறந்தார். எனவே, அவருடைய நெஞ்சமெனும் பாகனுக்கு இனியேனும், தேரை விரைந்து செலுத்து என்று அவர் கூறாரா, என்றோர் ஆவல் என் மனதைப் பிய்த்தது.

II

இலட்சியத்துக்காகவும், அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவி போன்ற கட்சிக்காகவும், சொந்த நலனையும், உயர் பதவியையும் வெறுத்து ஒதுக்கும் வீரமும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் சகிப்புத்