பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

25


தந்து சென்றான். மகன், அந்த மண்டல முடிதரித்து மட்டுமே ஆண்டிருப்பின், அவன் புகழ் மங்கியிருக்கும். இங்கும் எங்கும். இன்றும் என்றும், அவன் புகழ் எவரும் படித்து இன்புறுமாறு, அவன் தன் நிலையைச் செய்து கொண்டான் ! யாங்ஙனம்? தந்தை தந்த தரணியுடன் அமைந்தானில்லை. "அவன் மகன் இவன்" எனும் சொல் போய், "இவன் தந்தை அவன்" எனும் மொழி தோன்றுமாறு, அவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். அஃது என்னையெனில், பிலிப் தந்த மாசிடோனியா நாட்டு எல்லையிலே நின்று விடாது, அலெக்சாண்டர், காற்றெனச் சுழன்று களம்பல கண்டு, நாடு பல வென்று, நானிலம் புகழ, இன்றும் வரலாற்றின் மூலம், வாகையுடன் வாழுகின்றான்.

"பொன் மூட்டையினைக் கழுதையின் முதுகிலே ஏற்றி, அக்கழுதையை அனுப்பினால், அது பிடித்து விடும் ஒரு பட்டினத்தை!” என்றுரைத்தானாம் பிலிப். அதாவது, இலஞ்ச இலாவணம் கொடுத்து எந்த இலங்கையையும் பிடித்துவிடலாம் என்றான்-- எங்கும் விபீஷணர் கிடைப்பர் என்ற எண்ணத்தால்! அலெக்சாண்டரோ, பொன்கொண்டு போனானில்லை, போருக்குப் போனான்;புகழொடு திரும்பினான்; தன் உயிரைப் பணயமாக வைத்து வீர விளையாட்டாடினான், வேந்தர்க்கழகு வேலியாளுதல், வீரர்க்கழகு வேலி கோலுதல் என்ற உரைக்கேற்ப, மாசிடோனியாவை மட்டுமே அலெக்சாண்டர் ஆண்டிருப்பின், கிரேக்க நாட்டிலேயோ, அதை ஒட்டிய நாட்டிலேயோ மட்டுமே அவன் பெயரை மாசிடோனிய மன்னருள் ஒருவன் என்ற பட்டியிலே படிப்பர்; உலகு அவனை அறிந்-