பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வர்ணாஸ்ரமம்


திராது. இன்றோ ! உலகு அறியும். உலகில் பலப்பல அழியும், அவன் புகழோ நிலைத்து நிற்கும்! அரசு ஆள்வதற்கும், அரசு அமைப்பதற்கும், வித்தியாசம் என்னை எனில், பிலிப்பின் மகனாக வாழ்வதற்கும் அலெக்சாண்டராகத் திகழ்வதற்கும் உள்ள வித்தியாசமென்பேன்! சர் சண்முகத்தை,நான், அவர் ஆற்றலறிந்தே அரசாள அழைக்காமல், அரசு அமைக்க அழைக்கிறேன். மரத்தில் பழங்குலுங்கும் வேளையிலே, மந்தி தாவுமானாலும், கனியுதிரும்! அதுபோலக் கட்சி கனியுந்தறுவாயிலே, கடுவனோ மந்தியோ களித்துக் கூத்தாடும், கனி கிடைக்குமெனும் கருத்தினால். ஆனால், தோட்டம் அமைத்துத் துரவு எடுத்து, நீர் பாய்ச்சித் தரு வளர்த்திடும் செயலே முக்கியமானது. சர் சண்முகத்தை நானழைப்பது, தீஞ்சுவை தரும் பதவிப்பலாவைப் பறித்திட அல்ல; அதற்குக் கீச்சிடும் கடுவன்களும்,மையலூட்டும் மந்திகளும் என்றுமுண்டு, எங்குமுண்டு, நான், சர் சண்முகத்தை அழைப்பது, திராவிடத் தனி அரசு அமைக்க, வெறும் பதவியில் அமரவல்ல. சர் சண்முகம் அவர்களைத் தலைவராக்கும் பணியினைத்தான் வேறு சிலர் மேற்கொண்டுள்ளனரே, பயமேன் உனக்கு, என்று கூறுவீர்கள். உண்மையிலே வேறு சிலர் வேண்டி அழைக்க வேண்டிய அளவு, சர் சண்முகம், தூர விலகி நிற்கலாமா,நிற்கிறாரா, நிற்பது ஏன் என்றகவலை எனக்கு. வினைமுற்றிய தலைவன், வீடு திரும்பாது, சோலையிலோ சாலை ஓரத்திலோ, தங்குவானேன் ? அவர், தமது அன்புக்கு இருப்பிடமான மனை புக, அழைப்பு வேண்டுமா? அதுவா, தமிழ்ப்