பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

27


பண்பு என்று, என்மனம் என்னைக் கேட்கிறது. அதுமட்டுமல்லவே? மகனே, வா! மாசிலாமணியே வா, வா! தலைமகனே வா, வா!-என்று வருக அந்தாதியைப் பலர் பாடப்பாட எனக்குப் பயந்தான் மேலிடுகிறது.

"ஊரைக் கலக்கி வைக்கும் ஊத்துக்காட்டு அம்மையே, நாட்டைக் கலக்கி வைக்கும் நல்ல பத்ரகாளியே, வேண்டி அழைக்கிறோமே வேலாத்து அம்மையே," என்று, சிலம்பைச் சுற்றி, உடுக்கை முழக்கி, உள்ளே சென்ற குடிவகை, ஆவி மயமாக வெளியே வருமளவு உரத்த குரலிலே அம்மனை வேண்டிக் கூவும், பூஜாரிகளை நான் கண்டிருக்கிறேன். அதன் பலனாக ஆவேசம் வரும். வந்ததும் ஊத்துக் காட்டாளோ, சோத்துக்குடையாளோ, பூஜாரியையும் பக்தர்களையும் பார்த்து, "ஆடுவெட்டிக் கொழிவெட்டி பூஜை ஏண்டா போடலே? ஆடிமாத நோன்புக்கு ஆறு இலை போடலே, வேண்டிக் கொண்டபடி விருந்து படைக்கவேயில்லை! என்று கோபத்தைக் கக்கக் கேட்டிருக்கிறேன். அது போன்ற பூஜை போடும் முறை, அரசியலிலே, மகா ஆபத்தாயிற்றே என்றன்றோ நான் அஞ்சுகிறேன். மேலும், கட்சிப்பணி புரியத் தலைமைப் பதவி தேவையா என்பது, ஆழ்ந்து பதில் கூறவேண்டிய கேள்வி என்பதை அறிஞர் சண்முகம் அறிவார். பெரியார் கட்சித் தலைவராக இருக்கையிலேயே, அவர் பக்கநின்று சர் சண்முகம் பணியாற்றவும், தமிழகம் அதைக் காணவும், ஒருகாலம் பிறக்கக்கூடாதா! 'இதோ எனது குடும்பமுதியோர்' என்று பெரியாரைச் சர்