பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வர்ணாஸ்ரமம்


தொடுத்துச் சூட்டிடல் முறையாகுமா, என்று கேட்கிறேன்.

உலகிலே பலபல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசிய நாவலரையும் நானறிவேன். நெருப்பாறு தாண்டும் வீரரும் எனக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கும், பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்யாசத்தை உணரவேண்டுகிறேன். அவர்கள் படித்த,பக்குவ மனம் படைத்த கூட்டத்திலே பேசினர், அவர்களுக்கு எழுதினர். பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே, என்பதை அறியவேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லவர்களும், வெறும் சாமியாடிகளைக் கண்டித்துப் பேசவும் சக்தியற்றுக் கிடந்தகாலை, பெரியாரின் பெருங்காற்றுத் - தமிழகத்திலே வீசி, நச்சு மரங்களை வேரோடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதை உணரவேண்டும். உணர்ந்திடின், கட்சித் தலைமையை ஏற்கச் சர் சண்முகம் வரவேண்டும் என்று எழுதுவதுடன், பெரியாரையும் சேர்த்துக் கண்டிக்கும் செயலை எவரும் புரியார். சர் சண்முகம், கட்சியின் நடுநாயகமாகத் திகழ்வதற்குப் பிறரின் தூண்டுதல் தேவையா! அதிலும் தூற்றல் முதலடியாகவும் தூண்டுதல் கடையடியாகவும் கொண்ட கவிதை, காதுக்கும் கருத்துக்கும் கேடுண்டாக்கும், கட்சியிலே கலகலப்பையும், அதன் மீட்சிப் பாதைக்கு வழி அடைப்பையும் உண்டாக்கும் என்பது என் அபிப்பிராயம். அதனை நான் வெளியிட்டதற்குக் காரணம், பெரியாருக்கு வக்காலத்துப் பெறவேண்டுமென்பது