பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

39


செய்வார்'" என்று கண்வெட்டால் கருத்தைவெட்டிய காமக்கள்ளி, தன்னிடம் சிக்கிய சீமானைக் குறித்துக் கூறுவாள்.

"முகத்திலே இன்னும் ஒரே ஒரு குத்துவிழுந்தால் போதும், ஆசாமி கீழே விழுவான். தங்கத்தோடாவும் வெற்றிமாலையும் நமக்குத்தான் " என்று கூறுவான், குத்துச்சண்டைப் பந்தயத்திலே ஈடுபட்டவன்.

"இன்னும் சில நாட்களில் ஆசாமி சிவலோகப் பிராப்தியடைவான். பிறகு நானே சீமான், நமதே வாழ்வு" என்று லோபியின் வாரீசு கூறுகிறான்.

இந்த "ரகங்களிலே" எதை நீங்கள், மித்ரன் வாசகத்திற்கு உவமையாகக் கொள்வீர்களோ, எனக்குத் தெரியாது தோழர்களே ! எனக்கென்னமோ, இவ்வளவும் இன்னும் பலவும் தோன்றின, மித்திரன், சர் சண்முகம், பண்டைக் காப்பியங்களை மேலும் நன்றாகப் படிப்பாரானால் வர்ணாசிரமக் கோட்டையைத் தகர்க்க வேண்டுமென்ற நினைப்பையே விட்டு விடுவார், என்று எழுதி இருந்ததைப் படித்தும். சூட்சுமமின்றிச் சுதேசமித்திரன் எழுதாதே, வீணுக்கு வார்த்தையை வீசிடாதே, இந்த வாசகத்திற்கு விசேஷார்த்தமின்றி மித்திரனில் இடம்பெறாதே, என்று எண்ணியே ஏங்கினேன். சென்ற கிழமையே உம்மிடம் இயம்பினேன்; இக்கிழமை, அதுகுறித்துச் சிந்தித்தேன்; செக்கர்கொள்வானமும், சிந்துபாடும் சிற்றாறும்,நின்றிடும் நாரையும், நினைவிலே நின்றன!

"வர்ணாசிரமம் ' என்ற தலைப்பிலே, கலைப்படிப்பு, ஆரியக்குழியிலே, தமிழரைத் தள்ளக்கூடியதாக இருக்கிறது என்று எழுதுகிறாயே, சர்