பக்கம்:வர்ணாஸ்ரமம், முதற்பதிப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

வர்ணாஸ்ரமம்


புத்துலகர். அபிஷேகம் என்ற முறையிலே அல்ல. விக்ரகத்தைத் தூய்மையாக வைத்திருப்பது என்ற முறைக்காக, நீராட்டி வரலானார்.

"பளபளப்பான சிலைக்கு ஒரு பட்டுத் துண்டும் கட்டிப்பாருங்கள். அதன் அழகே அலாதிதான்" என்றார் திருவாளர் பழமை, மிஸ்டர் புதுமை, "இது ஒரு பிரமாதமா, கொண்டுவா, கொள்ளேகாலம் பட்டு வேஷ்டி" என்றார். "வீட்டிலே, பறிப்பாருமின்றி மலரும் மலர், உமது அறையிலே மண மூட்டட்டும். அதைப்பறித்து மாலை தொடுத்துக் கூத்தன் சிலையிலே போட்டுவிடுங்கள்" என்றார், பழமை. அதுவும் நடந்தது. "உங்களுக்கிருக்கும் வேலையிலே, காலையிலே இந்தக் காரியங்களையெல்லாம் எப்படிச்செய்து கொண்டிருக்க முடியும், யாராவது ஒரு ஐயனை வேலைக்கு வைத்து விடுங்கள்" என்று பழமை யோசனை கூறினார். ஐயரும் வந்துசேர்ந்தார். அவர் தமது வேலையைச் சரியாகச் செய்கிறாரா என்று பார்க்கக் காலையிலே மிஸ்டர் புதுமை செல்லலானார். ஐயர், விபூதிமடலை நீட்டினார். இரண்டொரு வாரங்களிலே "குனித்தபுருவம் எனும் தோத்திரம் பாடவும், கூத்தனை எட்ட நின்று கும்பிடவும், குடும்பக்கோயில் குருக்கள் தரும் குங்கும விபூதியைப் பயபக்தியுடன் வாங்கவும், மிஸ்டர் புதுமை பழகிவிட்டார். திருவாளர் பழமை "தீர்த்துக்கட்டிவிட்டோம் ஒரு தீப்பொறியை" என்று தமது குறிப்புப் புத்தகத்திலே பொறித்துக் கொண்டார்.

இதுபோலக் கலையிலே தொடங்கி ஆரியவலையிலே வீழும்வரை பலர் சென்று விடுவதைக் கண்டதா-