பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மனப் பிராந்தி |

ஒடுகிறது என்கிறான் ஒருவன். "ஏய் பாம்புடா பெரிய பாம்பு" என்று கத்துகிறான் ஒருத்தன். எல்லா ஜன்னல் கதவுகளும் டப்-டப் என்று விழுந்து அடைத்தன. நான் பத்திரமாக ஊர் போய்ச் சேருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை.

ஆனால் நான் சொல்ல வந்தது இதையல்ல. அதுவேறு. எனக்கு எதிர் பெஞ்சியில் ஒருவன் இருந்தான். அவன் முகத்தில் மீசை தான் முக்கியமாய், பெரிசாக, மதுரைவீரன் மீசை மாதிரி விளங்கியது. மூக்கும் எடுப்பாக நின்றது. கண்கள்-அவை பார்த்த பார்வை அந்தி மயங்கும் நேரம் அச்சம் தரும் சூழ்நிலை எதிரே ஒரு முரடன் என்னையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால்.என் மனம் பலப்பல எண்ணித் தவிக்கிறது. என் பார்வை எங்கெங்கு புரண்டாலும் மீண்டும், மீண்டும் ஏதோ வசிய சக்தியால் கவரப்படுவதுபோல், அந்த ஆளின் முகத்திலேயே மோதத்திரும்புகிறது. -

இவன் திருடனாக இருப்பான் கொலைகாரனாக இருக்கலாம். இவன் ஏன் என்னை இப்படி முழிச்சுப் பார்க்கவேண்டும்?-எனக்கு எதுவுமே புரியவில்லை. திடீரென்று அவன் பேச்செடுத்தான்.

"ஐயா, நீங்க விவசாய ஆபீசிலே குமாஸ்தாவாக இருந்தீங்க இல்லே?" -

ஆமாம் என்பதற்கு அடையாளமாக நான் தலையாட்டி வைத்தேன்.

"அதானே கேட்டேன்! நானும் அப்பவே புடிச்சி யோசிக்கிறேன். யோசிக்கிறேன். எங்கேயோ பார்த்த முகமா இருக்குதேன்னு தோணிச்சு. ஆனால் பிடிபடலே. நிங்க ரீவைகுண்டம் ஆபீஸ்லே இருந்தீக இல்லே?" -

நான் அழகப்பன் காளைமாதிரித் தலையசைத்தேன், மறுபடியும்.

“அதானே பார்த்தேன்! அப்போ பூச்சி இன்ஸ்பெக்டர்

சுப்பய்யர்கூட நானும் வந்தேன். பச்சை முந்திரிக் கொடிகளுக்கு

பூச்சிமருந்து தெளிக்க நான் மேஸ்திரியாக வந்தேனே, உங்களுக்கு ஞாபகமில்லே?

என் ஞாபகத்திலே இடிவிழ என் மறதி நாசமாய்ப் போக! இவையெல்லாம ஒழுங்காக இருந்தால், நான் அனுபவித்த வேதனை எனக்கு ஏற்பட இடமிருந்திருக்குமா? -