பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கொண்டுதான் இருக்கிறேன். ஏன்னு கேட்கணும். அந்தக் காலத்திலே உங்க அப்பா எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்காக, அந்த நன்றியினாலேயும். உன்னைக் கவனித்துக் கொள்ளும்படி உங்க அம்மா தன் கடைசிக் காலத்திலே என்னிடம் சொல்லிவிட்டுப் போனதனாலேயும்தான் நான் இவ்வளவு சிரத்தை காட்டுகிறேன்."

சூரியன் பிள்ளை இவ்வாறு பேசத் தொடங்கிவிட்டால், இளையபெருமாள் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியது. தான். தப்புவதற்கு வேறு வழி கிடையாது. இப்போதும் அவன் "சிவனே என்று உட்கார்ந்திருந்தான்.

"நம்ம அறம் வளர்த்த நாதர் இருக்கிறாரே அவருக்குக் காரியதரிசி தேவை என்று கேள்விப் பட்டேன். அறம் வளர்த்தாரைத் தெரியாது உனக்கு? என்ன பிள்ளையப்பா நீ வெறும் புத்தகப் பூச்சியாக இருக்கியே. பெரிய தலைவரு சிறந்த பேச்சாளரு. அப்படி இப்படீன்னு அவர் பேரு எங்கும் அடிபடுது. நீ என்னடான்னா அந்த ஆளைப்பற்றி எனக்கு ஒண்னுமே தெரியாது என்கிறீயே" என்று வருத்தப்பட்டார் பெரியவர். «r

"ஒ. அந்த எம்.எல்.ஏயை சொல்கிறீர்களா?' என்று இளையபெருமாள் கேட்டான்."அப்ப்ாடா இது புரிவதற்கு இவ்வளவு நேரமாச்சுதா? என்று பிள்ளை அலுத்துக் கொண்டார். "ஆமா.

அவரேதான். அவருக்கு ஒரு செக்ரடரி வேணுமாம்",

"அதுக்கு நான்-நீ என்று எத்தனையோ பேரு விழுந்தடிச்சு ஒடுவாங்களே மேலும், அவருக்குத் தெரிந்த பெரிய மனுஷங்க தங்களுக்கு வேண்டிய ஆசாமிகளுக்கு சிபாரிசு செய்வாங்க.." என்று இழுத்தான் இளையவன்.

"அதை எல்லாம்பற்றி உனக்கென்ன? நீ நான் சொல்கிறபடி செய்: அறம் வளர்த்ததாருக்கு ரொம்பவும் சிநேகிதரான ஒருவரைப் புடிச்சு, நான் ஒரு கடிதம் வாங்கி வந்திருக்கிறேன். உனக்காகத்தான். நீ அதை எடுத்துக் கொண்டு, நம்ம எம்எல்ஏயை பார்க்கப் போ அவர் என்ன சொல்கிறார் என்று பாரேன்" என நம்பிக்கையோடு அருள் புரிந்தார். சூரியன்பிள்ளை.

எம்.எல்.ஏ. .ുഖഞ്ജിങ്ങേ சந்திக்கப் போக வேண்டும் என்கிற எண்ணமே இளையபெருமாளுக்குக் கசப்பாக