பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

இருந்தது. "சனியன் பிடிச்ச இந்தச் சூரியன் பிள்ளைக்காகத்தான் போய்த் தொலைக்க வேண்டும் என்று அவன் மனம் புலம்பியது. பிறகு பரவால்லே. அதனாலே கால நஷ்டம் தவிர வேறு நஷ்டம் எதுவும் ஏற்படாது. மூணெழுத்து வாலர் எப்படி இருக்கிறார் என்றும் பார்த்துவிடலாமே!. என்று அவன் தனக்குத்தானே உபதேசித்துக் கொண்டான். -

அறம்வளர்த்தநாதர் எம்எல்ஏயை இளையபெருமாள் சந்திக்கச் சொன்ற வேளையில், வேறு அநேகரும் அவர் புேட்டிக்காகக் காத்து நின்றார்கள். காரில் வந்த கனவான்கள் இருவரோடு அவர் உரையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒட்டுப்போட்டு அவரைப் பெரிய மனிதராக ஆக்கிவிட்ட "இந்நாட்டு மன்னர்களில் பலர் அவருடைய தயவைக் கோரி "பல்லெல்லாம் த்ெரியக் காட்டி. சொல்லலாம் சொல்லி நாட்டி, துணைக்கரம் விரித்து நீட்டி"க் கெஞ்சுவதற்காகக் காத்துக் கிடந்தார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்களும், படிக்காமலே வாழ்வில் உயர்நிலையை எட்டிப் பிடித்துவிட்டவர்களும், பணக்காரர்களும் பணமில்லாதவர்களும் பல தரத்தினரும் எம்.எல்.ஏ.யிடம் ஏதாவது ஒரு உதவி பெறுவதற்காக அலைந்து கொண்டிருந்தார்கள். அவர் ஆளுக்குத் தக்கபடி பேசி, வந்தவரை எல்லாம் திருப்தி செய்து அனுப்பி வைத்தார். -

'வயல் விளைந்து சாப்பிடவேண்டிய நிலையில் இருப்பவர்கள் அநேகர் வாய் விளைந்து சாப்பிடுவோர் பலர்-இப்படி ஒரு பெரியவர் சொல்வது வழக்கம். அறம்வளர்த்தார் வாய்த் திறமையால் வயிறு வளர்ப்பவர் வாழ்க்கையை வளர்ப்பவரும்கூட இல்லையென்றால் அவர் எம்.எல்.ஏ. ஆகியிருக்க முடியுமா?" இவ்விதம் இளையபெருமாளின் மனக்குறளி முணமுணத்துக் கொண்டிருந்தது. அவசரக்காரர்கள் அனைவரும் போய்ச் சேர்ந்த பிறகு, இளையபெருமாள் பெரியவர் திருமுன் ஆஜரானான். அவருக்கு வேண்டியவர் எழுதித் தந்திருந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தான். தமிழில்தான் எழுதப்பட்டிருந்தது அது எழுதியவரின் தமிழ்ப்பற்றை அது காட்டுகிறது என்றே இளையபெருமாள் எண்ணியிருந்தான்.

உனக்கு இங்லிசு பேச வருமா என்று கேட்டார் எம்.எல்.ஏ. "நான் பி.ஏ. பாஸ் செய்திருக்கிறேன்" என்று ஆங்கிலத்தில் அறிவித்தான் அவன். - - -