பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து கொடிது, கொடிது | இத்தகைய வரவேற்பை முருகையா எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அடியின் வலியும், உள்ளத்து வேதனையும் சேர்ந்து அவனை விக்கிவிக்கி அழச் செய்தன. -

உள்ளே இருந்து வெளியே எட்டிப் பார்த்த தாய், பலவேசம் பிள்ளையின் ஆங்காரம் ஒருவாறு ஒடுங்கியதும் பேச்சு கொடுக்கத் துணிந்தாள். "பாவம், அவனை ஏன் இந்த அறை அறையணும்? படிப்பிலே தேறினது ஒரு குத்தமா?” என்று கேட்டாள். 3.

அவர் அவளை முறைத்துப் பார்த்தார். "தினசரி சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்குது வீட்டிலே. இன்னையப் பொழுது எப்படிடா கழியுமின்னு மனுசனுக்குப் பெரிய கவலையாக இருக்கையிலே, அந்தப் பயல் துள்ளிக் குதிச்சுக்கிட்டுவாறானே மேல் கிளாசுக்குப் போயாச்சு, புதுப் பொஸ்தகம் வாங்கணும். நோட்டுகள் வாங்கியாகணும். பேனா பென்சில், லொட்டு லொசுக்குயின்னு' ஏகப்பட்டது வாங்கணும் பணம் கொண்டு வா என்பானே. பையனுக்கு நல்ல சட்டை இல்லை. வேட்டி இல்லை. மேல் கிளாசுக்குப் போய்விட்ட உடனேயாவது அதற்கெல்லாம் ஏற்பாடு பண்ணணுமா, வேண்டாமா? பணத்துக்கு நான் எங்கே போவேன்? இதை எல்லாம் பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்க அவன் குதியாட்டம் போடுகிறானே!" என்று புலம்பினார் அவர். < *

வறுமைத் தீயில் வதங்கிக் கொண்டிருந்த அந்தத் தாயினால் சோகப் பெருமூச்சுதான் உயிர்க்க முடிந்தது.

நேரம் ஊர்ந்து கொண்டிருந்தது.

பலவேசம் பிள்ளையின் உள்ளத்தில் புகுந்து அவரைப் பேயாக மாற்றியிருந்த ஆத்திரமும் கோபமும் ஒடுங்கிப் போயின. அவருள் குடிகொண்டிருந்த இயல்பான நல்லதனம் அவரைக் கஷ்டப்படுத்த ஆரம்பித்தது. சுவர் ஒரத்தில் கிடந்து விம்மிக் கொண்டிருந்த பையனைக் காணக்கான அவர் மனசில் ஏதோ ஒன்று என்னவோ பண்ணியது. அவனை அவன் செய்யாத குற்றத்துக்காக - "பழியாக அறைந்தது" பிசகு என்ற உணர்வு குறுகுறுத்தது. அவர் அவன் அருகே போய் உட்கார்ந்து பரிவுடன் அவனுடைய முதுகை வருடினார். 'கொடுமை, கொடுமை" நாம் இப்படி வாழ நேர்ந்துவிட்டதே பெரிய கொடுமைதான்" என்று அவர்