பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


fai6ುದääಗ್ತಿ 129 படிப்பிலும் கெட்டிக்காரன் அவன். விளையாட்டில் தோல்வியுற முயற்சித்து அடிகள் வாங்கிக்கொண்ட பிறகு அவன் மற்றவர்களோடு சேர்ந்து விளையாடப் போவதை விட்டுவிட்டான். தெருப் பையன்களோடு கோலியும், சடுகுடும் பிறவும் விளையாடி மகிழ்ந்தான். அல்லது படிப்பில் ஈடுபட்டான். -

முருகையா பரீட்சையில் தேறிவிட்டான். "மேல் வகுப்புக்குப் போகிற உற்சாகம் அவனை ஆட்கொண்டது. அந்த சந்தோஷ சமாச்சாரத்தை அம்மா அப்பாவிடம் சொல்வதற்காக ஓடோடி வந்தான் ۱ .ge|6H66Tی

பலவேசம் பிள்ளைக்கு அன்று "மூடு சரியில்லாத நிலைமை. காரணம் என்னவாக இருக்கும், தெரியாதா? கையில் காசு இல்லை. வீட்டில் அரிசி இல்லை; விறகு இல்லை; எதுவுமே இல்லை. அடுப்பிலே புகையவேண்டிய நெருப்பு அவர் வயிற்றில் திகுதிகுவென்று எரிந்து கொண்டிருந்தது; நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது. அவருடைய மனைவி குறைகூறி ஏச்சும் பேச்சும் வாங்கிக் கொண்டு, ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டாள். ஒரு பீடிக்குக்கூட வக்கு இல்லாத நிலை"யை எண்ணிக் குமைந்து புழுங்கிக் கொண்டிருந்தார் பிள்ளை. -

"அப்பா, நான் பாஸ் பாஸாகிவிட்டேன் என்று உவகைக் கூச்சலோடு துள்ளி வந்தான் முருகையா. தந்தை சும்மா இருப்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்த அவன் மீண்டும் கத்தினான். "நான் பாஸ் அப்பா, எட்டாம் கிளாசுக்குப் போய்விட்டேன்" என்று குதித்தான்.

பலவேசம்பிள்ளை திடீரென்று எழுந்தார். தரையிலிருந்து பொங்கி எழும் சூறைக்காற்று போல. அவனை முரட்டுத்தனமாகப் பற்றினார். "நீ ஏண்டா பாசானே? அதுக்கு ஏமிலே இந்தக் குதிப்பு? உனக்கு ஏன்லேய் படிப்பு? நீ படிச்சு என்னத்தை வெட்டி முறிக்கப் போகிறே? சோத்துக்குச் சம்பாதிக்கத் துப்பு உண்டாலே உன்படிப்பினாலே?" என்று கூச்சலிட்டுக்கொண்டே அவனை அறைந்தார்.

"பையன் படிச்சுப் பாஸ் பண்ணி எல்லோருக்கும் சோததுககு வழி செய்துவிடப்போகிற மாதிரித்தான் குதிப்பும் கூப்பாடுமாக வீட்டுக்கு வந்துவிட்டான் என்று உறுமிக்கொண்டு மேலும் இரண்டு அறை வைத்தார் தந்தை. -