பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பத்மா வாந்தி எடுக்க வாசல் பக்கம் ஓடினாள். மீனாட்சி அம்மாளோ பேச்சுமூச்சு இல்லாமல் நீட்டி நிமிர்ந்து விட்டாள்.

பாவம், சாவித்திரி அவள் தன் போதாத காலத்தையும் பொல்லாத விதியையும் எண்ணித் தவித்தாள் கண் கலங்கினாள் கைகளைப் பிசைந்தாள். டாக்டருக்கு ஆள் அனுப்பினாள். அங்குமிங்கும் அலைந்தாள். அமைதியையும் ஆனந்தத்தையும் அடியோடு இழந்து விட்டாள் அவள்,

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. சாவித்திரியின் உள்ளம் வேதனையைச் சுமந்து குழப்பத்தால் கலங்கி, அவதியுற்றது.

டாக்டர் வந்து பார்த்தார். அபாயம் எதுவுமில்லை என்று சொன்னார். பத்மா நிம்மதியாக மூச்சுவிட்டாள். ஜானகி மெளனமாகத் நிலையை ஆட்டினாள். மீனாட்சி அம்மாள் அசைந்து கொடுத்தாள்.

சாவித்திரி, டாக்டரை வழி அனுப்புவதற்காக வெளியே வந்தவள். அடுத்த வீட்டின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அங்கே நின்ற சூரியகாந்தம் "சாவித்திரி. உன்னிடம் ஒரு சமாச்சாரம் சொல்லணும்" என்று கூறியபடி நெருங்கி வந்தாள். -

"அப்பவே சொல்லியிருக்கணும். சொல்லிவிடலாம்னு கூட நினைச்சேன் ஆனால் உங்க வீட்டிலே யார்யாரோ வந்திருப்பதாகத் தெரிஞ்சுது சரி, அப்புறம் சொல்லிக் கொள்ளலாமே எல்லோரும் சந்தோஷமா இருக்கிறபோது, நாம போயி அநாவசியமாக."

அவசரம் இல்லாமலே பேசத் தொடங்கிய அம்மாளிடம் "என்ன" என்ன விஷயம்?" என்று அவசரமாக விசாரித்தாள் சாவித்திரி.

'உன் பூனை இருக்குது பாரு. அதாவது ஒரு கறுப்புப் பூனை இருந்தது பாரு.அது வந்து. அடுத்த வீட்டு அம்மாள் அவசரப்படும். பண்பு இல்லாதவள். இழுத்து இழுத்துப் பேசிக் கொண்டிருந்தாள். அது சாவித்திரிக்குப் பிடிக்கவில்லை.

"சீக்கிரம் சொல்லுங்க" என்று தூண்டினாள் அவள்.

"எங்க வீட்டு அவர் வந்து ஷெட்லேயிருந்து தாரை எடுத்தார். எடுக்கிறபோது இந்தப் பூனை சக்கரத்தில்ே அடிப்பட்டுவிட்டது. மூதேவி அது காருக்கடியிலே போயிப் படுத்துக் கிடக்கும்னு யாருக்குத் தெரியும் ஒரு பூனைக்கு ஒன்பது ஆயுசு அது லேசிலே