பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிப் புரை

வல்லிக்கண்ணனின் சிறப்புச்சிறுகதைகள்

இலக்கியச் செல்வர் என்று போற்றப்படும் மூத்த முற்போக்கு எழுத்தாளர் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய 18 சிறுகதைகளின் தொகுப்பாகும். இந்த நூல். நண்பர் திரு வ. விஜயபாஸ்கரன் அவர்கள் 1955 முதல் 1962 வரை நடத்திய முற்போக்கு இதழ் "சரஸ்வதி'யில் வெளிவந்தவை இச்சிறுகதைகள். நூலாசிரியர் பற்றிய ஒரு குறிப்பை இத்துடன் இணைத்துள்ளோம். 60 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய வாழ்வில் அவரின் சாதனைகளை (சிறுகதை, குறுநாவல், கட்டுரை, கவிதை, நாடகம் முதலியன) ஒரளவு இது எடுத்துக் கூறும் என நம்புகிறோம். தமிழ் இலக்கியத்தில் சிறுகதைகள் வரலாறு பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையையும் அவர் எழுதியுள்ளார். 82 வயது ஆகியும் இளைஞன் போன்று சுறு சுறுப்புடன் தமது இலக்கிய பணியை தொடர்ந்து செய்து கொண்டும் இளம் எழுத்தாளர்களை ஊக்கு வித்தும் வருகிறார். -

1959 ம் ஆண்டின் சரஸ்வதி ஆண்டு மலரில் வெளிவந்த துணிந்தவன் என்ற இவரது நாவலை நாம் ஏற்கனவே வெளியிட்டோம். அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது இந்த சிறுகதைத் தொகுப்பும் தமிழக வாசகர்களின் நல்ல ஆதரவைப் பெறும் என்பதில்