பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 து பிரமை அல்ல - மாதிரி வளர்ந்துவிட்ட தடிப்பன்றி-நிதானமாக நின்று, மந்தமான - அழுக்குப் படிந்து மங்கிவிட்ட மஞ்சள் நிறக் கண்ணாடி வட்டங்கள் போன்ற-சிறு கண்களால் அவரை வெறித்துப் பார்க்கும்.

அக் கண்கள்.அவற்றை அவர் எங்கே பார்த்திருக் கிறார்?.அவரை என்னென்னவோ செய்யும். அவற்றில் பிறக்கிற ஒளியற்ற ஒளி அவருக்கு அச்சமும் அருவருப்பும் தரும், அந்தப் பன்றி வாயை விசித்திரமாக இழுத்துச் சுளிக்கும், அது அவரைப் பரிகாசிப்பது போலிருக்கும். அவருக்கு விளக்க முடியாத வெறுப்பும் வேதனையும் எழும்.

"ஒரு நாள் அந்திக் கருக்கலில்-அவர் பட்டாசாலையில் இருந்த குத்து விளக்கை ஏற்றிவிட்டு, அரிக்கன் லைட்டில் ஒளி ஏற்படுத்தி அதை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்தகொண்டிருந்தார். திண்ணைக்கும் இரண்டாம் கட்டுக்கும் இடையில் உள்ள வாசல்படியில் கறுப்பாய். உயரமாய், அது என்ன?. அவர் தேகம் நடுங்கியது. ஆமாம். அந்தப் பன்றிதான். ஏனோ அவர் அலறிவிட்டார். தெளிவற்ற ஒலம் தெறித்து விழுந்தது அவர் வாயிலிருந்து. நடுங்கிய கையிலிருந்து நழுவி விழுந்தது விளக்கு விழுந்த விளக்கின் சிம்னி "சிலீர்" என்ற ஒலியோடு உடைந்து சிதறியது. ஒளி அவிந்துவிட்டது. - -

அந்தக் கணத்தில் அவர் அனுபவித்த பயம்-தெளிவற்றது: அளவற்றது. அர்த்தமற்றது. அந்தப் பன்றி வீட்டுக்குள்ளேயே வந்து விடுமோ என்ற அச்சம், வந்துவிட்டதுபோல் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதுபோல், அசிங்கமான அதன் வாய் தன் உடல் மீது பதிவதற்காகத் துணிவதுபோல் ஒரு குழப்பம். அது நீங்குவதற்குச் சில நிமிஷங்கள் பிடித்தன. தெளிவு ஏற்பட்ட பிறகுகூட அவரது உடல் நடுக்கம் தீர்ந்து விடவில்லை.

அவர் உள்ளே சென்று வேறொரு விளக்கை எடுத்து ஏற்றிக்கொண்டு வெளியே வந்தார். அப்பொழுது தெருவில் காலடி ஓசை கேட்கவும் அவருக்குத் "திக்-திக் கென்றது. "யாரது" என்று கத்தினார் அவர் கூப்பாடாக வெடித்த அக்கேள்வி அவர் குரலை விசித்திரமானதாக ஒலிபரப்பியது. -

அதனால் திகைப்படைந்த வண்டிக்காரன், "என்ன எசமான், நான் தான்-மாணிக்கம்" என்று.அறிவித்தான்.