பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ கண்ணில் படாத காதல் |

"ஏனோ?" "நான் விரும்பியபடியே என்னை அழைத்ததற்காக" அன்று அதற்குமேல் அவள் பேசவில்லை.

எனினும், தினம் தினம் இது வளர்ந்து வந்தது. "தொல்லை என்று அவர் எண்ணும் அளவுக்கு அது வளர்ந்துவிட்டது. அவ்வளவுதானா?

"நம் நடவடிக்கைகளைத் துப்பறிய முயல்கிறாளே அவள் என்ற கோபமும் ஏற்பட்டது அவருக்கு. ஆனாலும், அவளைக் கண்டுபிடிக்கவோ, அவள் பேச்சுக்குத் தடைவிதிக்கவோ அவர் முயலவில்லை. .

ஆகவே அவள் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தாள். "என்னைக் கண்டுபிடித்து விட்டீர்களா? நான் யார் புரிந்ததா?" என்று தினம் கேட்டுத் தொல்லை தந்தாள். நினைத்த வேளைகளில் எல்லாம் போன் செய்து ஒரு பாட்டுப் பாடுங்கள் ஸார்" என்று கெஞ்சினாள். 'நீலப் புடவைக்காரியோடு சிரித்துப்பேசியபடி சினிமாவுக்குப் போனிர்களே? அது யார்?. கனகாம்பரப் பூவைத் தலை நிறையச் சுமந்தபடி திரிந்த சில பெண்களோடு நீங்கள் கடற்கரையில் காட்சி அளித்தது உண்டா, இல்லையா?" என்று மிரட்டினாள். "என்னைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்கு இன்னும் வரவில்லையா?" என்று அவள் விசாரித்தாள். -

கானப்பிரியன் அவளோடு விளையாடுவதில் ஆனந்தமே கண்டார். அதனால் சில சமயங்களில் சில பாடல்களை மெதுவாக முனங்கிவைத்தார். ஒன்றிரு சமயங்களில் "லவ் டயலாக்" பேசவும் துணிந்தார் அவர்.

"வசந்தம் வந்துவிட்டது நண்பரே! இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நாம் முகம் அறியாக் காதலர்களாகப் பேசிப் பொழுது போக்குவது?" என்று அவள் குழைந்தாள். போனில்தான்.

அவர் ஒரு இடத்தைக் குறிப்பிட்டார். நல்ல நேரத்தையும் குறித்தார்.

"எந்தன் இடது தோளும் கண்களும் துடிப்பதென்ன இன்பம் வருகுதென்று சொல், சொல், சொல் கிளியே' என்று இசைத்தாள் அந்தப் பெண்.