பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


F |நல்ல காரியம் |

உலகம் மிகவும் பயங்கரமானது நண்பரே, மிகவும் பயங்கரமானது.

"வாழ்க்கை மிக மிகக் கொடியது நண்பரே, மிக மிகக் கொடியது".

ஒவ்வொருவரும் எத்தனையோ தடவைகள் சொல்லி விட்ட அல்லது ஒரு தடவையாவது சொல்ல விரும்புகிற அல்லது சொல்லியே தீரக்கூடிய இந்த வார்த் தைகளை இப்பொழுது தான் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையென எடுத்துக்கொண்டு "ஆர்க்கிமிடீஸின் பேரன் மாதிரி நான் ஒலமிடத் துணிந்திருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. -

பம்பாயிலிருந்து எனது நண்பர் ஒருவர் எனக்கு எழுதியுள்ள கடிதம் இப்படி ஆரம்பமாகிறது. -

எனக்கு எப்பொழுதாவது மிகவும் சுவையான கடிதங்கள் வருவது உண்டு. பம்பாய் நண்பர் எழுதியுள்ள கடிதம் வெறும் கடிதமாக இல்லை. அதைப் படித்து நான் பெற்ற இன்பத்தை இவ் வையகமும் பெறட்டுமே" என்ற நல்லெண்ணத்தோடு கடிதத்தை இங்கே தருகிறேன்.

"வாழ்க்கையை, அது காட்டும் உண்மைகளை ஆராய்ந்து உணர அவாவுகின்ற மாணவன் நான் என்று நீங்கள் பல இடங்களில் எழுதியிருக்கிறீர்கள். அதனால் தான் நான் உங்களுக்கு இவ் விஷயம் பற்றி விரிவாகவே எழுதத் துணிகிறேன். - .

"அகல்யாவைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. இந்திரனோடு ‘காமப் புது மண மதுவின் தேறல்