பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒ நல்ல காரியம் |

so 靈_盟

"ஒரு நாள் நானும், பம்பாய் நண்பர்களில் எனக்கு மிகவும் பிடித்த "கொழுக்கட்டையும் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தோம்.

"இந்தக் கொழுக்கட்டை இருக்கிறானே, அவன் ரொம்பவும் ஜாலி பிரதர். அவன் பெயர் வேறு. இந்தி பேசுகிறவன் தான். அவனுக்கு தமிழ் நாட்டுக் கொழுக்கட்டை மீது அபாரமான காதல். எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் "கொழுக்கட்டை இருக்குதா? கொழுக்கட்டை இருக்குதா?" என்று பறப்பான். ஆகவே, எங்கள் வீட்டில் கொழுக்கட்டை டிபன் செய்கிற தினங்களில் எல்லாம் அவனை நான் விருந்துக்கு அழைப்பது உண்டு என்பது "சொல்லாமலே பெறப்படும்" என்கிற இலக்கணத்துக்கு உட்படும் ஒரு விவகாரம் என்க.

"அவனும் நானும் வீதி வழியே போய்க் கொண்டிருந்தோமா? அப்போ என்ன ஆச்சுது? வீதியின் ஓரமாக ஒரு பெண் நடந்து போனாள். வேகம் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். என் நண்பன் கொழுக்கட்டை அழகு ரசிகன். கோகுலத்துக் கண்ணனையும் அர்ஜூனனையும் வியந்து பாராட்டி விழுந்து கும் பிட்டு, ஒரளவுக்காவது பின்பற்றத் துடிக்கிற மகாரசிகன். அவன் சைக்கிளை வேகமாக மிதித்து முன்னேறிப் போனான். கொஞ்சதுரம் போய்விட்டு மறுபடியும் திரும்பி வந்தான். அந்த இரட்டைச் சடைக்காரியின் பின்னழகைப் பார்த்து வியந்த கண்கள் அவளது முன்னழகைக் கண்டு களிக்காமல் இருக்கலாமா? அதற்காகத்தான். ஒரு தடவை பார்த்தவனுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிடவே, இரண்டாவது தடவையாக முன் சென்று. கீழிறங்கி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்து வந்தான். அவளை நன்றாகக் கவனித்தபடி நடந்தான்.

"அவள் அவனை ஒரு தடவை தலைநிமிர்ந்து பார்த்தாள். பிறகு அவனை லட்சியம் செய்யாமல், கம்பீர நடை போடும் அராபிக் குதிரை மாதிரி, மிடுக்காக நடந்து சென்றாள். அவள் கையில் சில புத்தகங்கள் இருந்தன. எனவே அவள் கல்லூரி மாணவியாக இருக்கலாம் என்று பட்டது.

"கொழுக்கட்டை என் அருகில் வந்ததும், "என் மூளையை சலவைக்குத் தான் போடணும்" என்று அலுத்துக்கொண்டான். "அழுக்கேறி ரொம்பவும் தடித்து விட்டதாக்கும்?" என்று கேட்டேன். "மறதி, மறதி மறதி. அதைச் செருப்பில் அடிக்க என்று அவன்