பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|வல்லிக்கண்ணன் 靈 65 விதம்விதமான மனிதர்கள் அவரைக் காண வருவது உண்டு. இது நித்திய நியதி ஆகிவிட்டது.

இப்படி அவர் எல்லார்க்கும் எளியவனாக விளங்குவதால் அவருடைய பொன்னான காலம் வீணாகிப் போகிறதே என்று சில மெய்யன்பர்கள் வருத்தப்படுவது வழக்கம். அவர்கள் அவ்விதம் எடுத்துச் சொல்லும் போதெல்லாம் தாமோதரன் மோகன முறுவல் ஒன்றையே பதிலாகத் தந்துவிடுவார். சிற்றொளி சிதறக் கூடிய சிறு விளக்காயினும் பலருக்கும் அது பயன்படக்கூடுமாயின் அதன் சிறப்பே தனிதான். தன்னால் இயன்றவரை இருளை அகற்றவும், வேறுபல விளக்குகளில் ஒளி ஏற்றவும் அது பயன்படுவது நல்லதா? அல்லது குடத்துள் வைத்த விளக்காகி விடுவது நல்லதா?" என்று கேட்டுவிட்டுச் சிரிப்பார் அவர் அவருடைய சிரிப்பு குழந்தையின் களங்கமிலா நகை ஒலி போல் தொனிக்கும். ஞானியின் கவலையற்ற சிரிப்பாகவும் தோன்றும்.

"நீங்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறீர்கள். அது சரியல்ல" என்று சில நண்பர்கள் அவரிடம் சொல்வது உண்டு.

"மனிதர்கள் எல்லோரும் சமம். இல்லையா?" என்று புன்னகை புரிந்தவாறே கேட்பார் அவர். w - -

"உண்மைதான். ஆனால் மனிதர்கள் உருவில் கயவர்களும் இருக்கிறார்களே' என்று யாராவது சொன்னால், "மனித சுபாவத்தை ஒரே அடியாக மாற்றி விட முடியாது அல்லவா? சிலரின் பண்பாட்டை முற்றிலும் மாற்றி விட இயலாது என்பதற்காக, அவர்களை ஒதுக்கி வைப்பதும் நல்லதில்லைதான்" என்பார் தாமோதரன்.

அவர் உயர்ந்தவர். அவர் உத்தமர். அவர் சிந்தனையாளர். அவர் நல்லவர். அவர் ஞானி இவ்விதம் அவருடைய புகழ் பரவியிருந்தது.

உயர்ந்த கொள்கைகள் உடைய லட்சியவாதி. உண்மை தெரிந்து சொல்பவர். ஊருக்கு நல்லது செய்பவர். ஓயாது உழைப்பவர். பிறரை உழைக்கத் துண்டுகிறவர். உழைப்பவர்கள் உரிமைகளைப் பெற்றே தீர வேண்டும் என்று வாதாடுபவர். உரிமை களைப் பெறுவோர் தம் கடமைகளைத் தவறாது செய்தாக வேண்டும் என வற்புறுத்துபவர். வாழ்விக்க வந்த வழிகாட்டி - அவரைப் பற்றி அறிந்தவர்கள் இவ்வாறு சொல்வர். .