பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மீனாட்சி அம்மாளுக்கு ரொம்பவும் இளகிய மனசு.

அப்படித்தான் சொல்லி வாந்தார்கள் அவளை அறிந்தவர்கள் எல்லோரும் அவளும் அவ்வாறு எடுத்துக்

சொல்லத் தவறுவதில்லை.

பெரிய இடத்தைச் சேர்ந்தவள் அவள், உருவத்திலும் அவள் பெரியவள்தான். பொதுவான ஸ்திரீ தர்மத்தை வளும் அனுஷ்டித்து வந்தாள். அதனால் அவளது வயது, நின்றுபோன கடியாரத்தின் முட்கள் போல, கிழிக்கப்படாத காலண்டர் தாளைப்போல, ஒரே எண்ணில் நின்றிருந்தது. அஞ்சாறு வருஷங்களாகவே அவள் வயது இருபத்துநான்காகத்தான் இருந்தது

அதற்காக அவளுடைய உடல் வளர்ச்சியுறாமல் போகவில்லை. கேவலம் நூற்றைம்பது பவுண்டு மாத்திரமே கனத்திருந்த அவளது தேகம் நாளடைவில் இருநூற்றுச் சொச்சம் பவுண்டு எடையாகப் பெருத்திருந்தது. வேலை எதுவுமே செய்யாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தும், அப்படி உட்கார்ந்தே இருப்பது அலுத்துப் போனால் படுத்தும், உடலுக்குச் சுகம் தேடினால் அது பெரியதனம் பெறாதா என்ன? பெருஞ் சாப்பாட்டுக்கு இடைப்பட்ட வேளைகளில் எல்லாம் பழம் என்றும் பாதாம் பருப்பு என்றும், சாக்லெட் என்றும் உள்ளே திணித்துக் கொண்டிருந்தால், அதை எல்லாம் ஏற்றுக் கொள்கிற உடல், கொடியாகவா இருக்கும்? ஆகவே, மீனாட்சி அம்மாள் பிறப்பினால் மட்டுமல்ல, தோற்றத்தினாலும் பெரிய மனுவியாகத்தான் விளங்கினாள்.