பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஒரே ஒரு மனிதன் அவற்றைச் சுற்றி வட்டமிட்டு உழல்கிறது. பிணத்தின்மீது அதற்கு மோகம்" - .

"зьетр ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்.அதைச் சுடுகாட்டுக் காக்கை என்றும் சொல்ல்லாம்.காக்கை உகக்கும் பிணம் என்று ஒரு பாட்டு இருப்பதாக ஞாபகம்:

அவ்விரண்டு பேரும் சொற்களைக் குத்தி இழுத்துக் குதறியபடி போனார்கள்.

நாய் நாறிக்கொண்டு கிடந்தது அதே இடத்தில்.

அவரவர் வேலை அவர் அவர்களுக்கு அவரவர் கவலைகள் எவ்வளவோ

வெயிலும், காற்றும், தூசியும், ஈயும் தம் தம் வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டுதான் இருந்தன.

அவ்வழியே ஒருவன் வந்தான். நின்றான்.அங்குமிங்கும் பார்த்தான். . . .

சற்று தள்ளி ஒரு பள்ளம் தென்பட்டது. அவன் கையில் மண் வெட்டியும் இருந்தது.

அவன் அந்த உடலை எடுத்துக் குழியில் சேர்த்தான். மண்ணைக் அள்ளிப் போட்டான். நன்கு மூடினான். தன் வழியே போனான். அப்படி ஒரு வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டவன் இல்லை அவன். அவன் செய்த வேலைக்குக் கூலி கிடைக்காது என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். இருந்தாலும், நாறிக்கிடந்த நாய் உடல் அவன் பார்வையில் பட்டதும், ஏதாவது செய்தாகவேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. -

>}: