பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்காள் கினைவுகள் 1944ல் நண்பர் வல்லிக்கண்ணன் கிரா: ஊழியன் ஆசிரியராய் இருந்தபோது நாகப்பட்டி ம்ை வந்திருந்தார். அப்போது நாகப்பட்டினத் தில் திரு. கிருஷ்ணசாமி என்பவர் சக்தி நாடக சபாவை உருவாக்கினார். அந்த சபா எங்கள் ஊரில் பிறந்து, உருவான கதை வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. நண்பர் எஸ். டி. சுந்தரம் என்ற நாடக ஆசிரியர் கவியின் கன வு’ என்ற நாடகத்தை எழுதி சக்தி நாடக சபையில் நூறு நாட்களுக்கு மேல் நடத்தினார். அதைப் பார்க்க வெளியூர் ஜனங்களுக்கு 'ஸ்பெஷல் ட்ரெயின்' விட்டனர். தமிழ் நாட்டின் எல்லா பத்திரிகை ஆசிரியர்களும் வந்து பார்த்து ஓகோ என்று பத்திரிகையில் புகழ்ந்து எழுதினார்கள். அந்த சமயத்தில்தான் வல்லிக்கண்ணனும் வந்திருந் தார். பல எழுத்தாளர்களையும், பத்திரிகை ஆசிரியர்க்ளையும், கலைஞர்களையும் கவிஞர் களையும் தினசரி எனக்கு அறிமுகம் செய்து வைப்பார் நண்பர் எஸ். டி. சுந்தரம், அவருடைய விருப்பப்படி எங்கள் ஊர் நாகை வெளிப்பாளையத்தில் என் மதிப்புக்குரிய நண்பர் வே. கோவிந்த ராஜு நடத்தி வந்த பொது நல சங்கம்-தமிழ்க்கழகம் சார்பில் வல்லிக்கண்ணன் அவர்களுக்கு விருந்தொன்று வைத்து அவர் இலக்கிய சொற் பொழிவைக் கேட்டோம். அந்தக் காலத்திலேயே (நாற்பத்தி ஐந்து வருஷத் திற்கு முன்) அவருக்குப் புதுக்கவிதையில்