பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{05 & வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | ஆனால், அங்கு ஊதி இங்கு ஊதி ஆக அடுப்பு ஊதியான சிவகாமி கிண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வந்தவள் என்பது அவள் பேசப் பேசப் புரிந்துவிட்டது. ஆச்சி, இது மாதிரி எப்பவுமே நடந்தது கிடையாது. என்னமா வந்ததுங்கிறே சாமி. எனக்கானா ஒரே பயமாப் போயிட்டுது. எல்லோருக்குமே பயம்தான். சாமியா? யாருக்கு வந்தது? என்று பரபரப்புடன் விசாரித்தாள். ஆச்சி. பர்வதமா ? எல்லைக்கியா பிள்ளை தங்கச்சி பர்வதத்துக்கா? என்று, நம்பிக்கை கொள்ளமுடியாத வளாய் ஆச்சி கேட்டாள். ஆமாமா, பர்வதத்து மதினிக்கு சாமி வந்தது போல வேறே யாருக்குமே, எங்கேயுமே வந்தது கிடையாது. எவ்வளவு பயமாப் போச்சு தெரியுமா? வாயெல்லாம் ஒரே ரத்தம். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆறாக வழியது. உதட்டிலே ரத்தம். ஏ. அம்மா! சாமீன்னு சொன்னா அது அல்லவா சாமி வாறது.' சிவகாமி பேசினாள். ஆவு ஆச்சியை மட்டம் தட்டும் மகிழ்ச்சி கூத்தாடும் குரலிலே பேசிக் கொண்டே போனாள். ஆச்சிக்குக் கிர் கிர் என்று வந்தது. சூழ்நிலை சுழல் ராட்டினத்திலே ஏறிவிட்டது போலிருந்தது! உலகமே சுற்றுவது போல் தோன்றியது. கண்கள் இருண்டன. காதருகில் ஏதோ இரைச்சலிடுவது போல் பட்டது. ஆச்சி கீழே சாய்ந்துவிட்டாள். உண்மையான மயக்கம் இது. மறுபடி ஆச்சி கண்விழித்தபோது அவள் அறிவிலே தெளிவு ஏற்பட்டு விட்டது. சண்டாளி பர்வதம் பொறாமையினால் செய்த சதி இது. ஆனால் பழிகாரி எனக்கு முந்திவிட்டாளே! ரத்தம் காட்டிப் போட்டாளே, இனிமேல் எனக்கு மதிப்பு ஏது? எனது சாமி ஆட்டத்துக்குப்