பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* {45 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் தானே இதெல்லாம் என்ன கேள்வி' என்று அவர் சிடுசிடுத்தார். தனது சுபாவத்தின்படி நடந்துகொள்வதுகூட மற்றவர் கண்களில் விபரீதமாகத் தோன்றக்கடும் என்பதை பாலகிருஷ்ணன் அப்பொழுது உணர்ந்தான். ஆகவே அவன் வேகமாகக் கையெழுத்திட்டு நோட்டையும் பேனாவையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்தான். - 'நன்றி' என்று தெளிவாக உச்சரித்தாள் அவள், கைகூப்பி வணக்கம் தெரிவித்து விட்டுத் தன் வழியே போனாள். கிதைக்காரர்கள் எல்லோரும் எப்பொழுதும் வர்ணிக்க ஆசைப்படுகிற ரகத்தைச் சேர்ந்த பெண் அல்ல அவள். பிரமாதமான அழகு பெற்றிருக்கவில்லை அந்த யுவதி. சாதாரணமான பெண். பகட்டான ஆடை அணிந்திருக்கவு மில்லை. வசீகரிக்கும் அலங்காரம் எதுவும் அவளிடம் இல்லை. அவளுடைய சாதாரணத் தன்மையே விசேஷமான தகுதியாகத் தோன்றியது பாலகிருஷ்ணனுக்கு அவள் முகத்தில்-எடுப்பான மூக்கிலும், துடிப்பு நிறைந்த உதடுகளிலும், உணர்ச்சி பெருகும் கண்களிலும்பெண்மைக்கு இனிமை கூட்டும் நயங்கள் காணப்பட்டன. 'ஒரு பெண்ணுக்கு இவ்வளவு அழகு போதும்! என்று நினைத்துக் கொண்டான் அவன். அவளுடைய கரிய கூந்தல்கூட-நெற்றிக்கு மேலே நெளிந்து சுருண்டு கிடந்த நேர்த்திதான்-அந்த முகத்துக்கு நன்றாகவே இருந்தது என்று கூறியது அவன் மனம், - நல்ல பெண்தான். அவள் என்னைப் பற்றி என்ன எண்ணினாளோ! நான் பேச முன்வந்த லட்சணம் இருக்கட்டும். அவள் என் அருகில் வந்து நின்றதைக்கூட நான் கவனிக்கவில்லையே! அவள் கையெழுத்து வேண்டும் என்று கேட்ட உடனேயே நான் எழுதிக் கொடுக்காமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தது பற்றி அவளும்