பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்து ళ 144 செய்யப்பட்ட போதுதான் அவன் தலைநிமிர்ந்தான். அங்கே பக்கத்தில் ஒரு யுவதி கையில் சிறு குறிப்புப் புத்தகம் ஒன்றை ஏந்தியவாறு நிற்கக் கண்டான் அவன். இவள் என்னையா அழைத்தாள்? ஏன் அழைத்தாள்? என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. அவள் முகத்தை நோக்கினான் அவன். கையெழுத்து வேனும் என்று மெல்லிய குரலில் பேசிய அந்த இளம் பெண்ணின் இதழ்கள் மோகன முறுவல் ஒன்றைச் சித்தரித்தன. அந்த இளம் நகை அவள் முகத்துக்கு அதிகமான கவர்ச்சி அளித்தது. 'என் கையெழுத்தா? எதற்கு ' என்று கேட்டான் பாலகிருஷ்ணன். 'ஆட்டோகிராஃப் சேர்க்கிறேன் என்றாள் அவள், லேசாகச் சிரித்துக் கொண்டே அது சரி, என் கையெழுத்து எதற்காக நான் ரொம்பப் பெரிய மனிதன் ஒன்றுமில்லையே! என்றான் அவன். 'சும்மா இருக்கட்டும்...இதோ பேனா என்று நோட்டையும் பேனாவையும் அவனிடம் நீட்டினாள் அவள். அவற்றை வாங்கிக் கொண்டதும் அவன் கேட்டான், வெறும் கையெழுத்து மட்டும் போதுமா? வேறு ஏதாவது எழுதித் தரவேண்டுமா? என்று. - 'உங்கள் இஷ்டம்! என்று முணுமுணுத்தாள் அவள். அவன் இளம் பெண்ணுடன் பேசி மகிழ வேண்டும் எனும் ஆசையோடு தான் இவ்வாறு வீணாக வார்த்தையாடுகிறான் என்று எண் ணி விட்டார் அருகிலிருந்த பெரியவர் ஒருவர். கையெழுத்து போடுவதானால் போட்டுக் கொடுத்து விட வேண்டியது