பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கைஏழுெத்து ; శ• 152 விரலை வைத்து அழுத்திக்கொண்டு அந்த யுவதி அவ்வாறு கூவியது மிகவும் அழகாகத்தான் இருந்தது. அவன் அவள் அழகை விழிகளால் வியந்து கொண்டிருந்தான். சட்டென்று அவள் முகம் குழம்பியது. அவளுடைய விழிகள் தாழ்ந்தன. எனினும் அவள் மகிழ்ச்சி குன்றிவிட வில்லை. நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?' என்றாள் அவ6:. நினைத்தவுடனே வந்து தரிசனம் தரும் தேவன்போல் நான் தென்பட்டு விட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? என்று அவன் கேட்டான். உடனேயே, சே, இப்படிக் கேட்டது தப்பு. அவள் என்ன எண்ணிக் கொள்வாள்?' என்று அவன் மனமே அவனைக் கடிந்துகொண்டது. . அவள் என்ன எண்ணினாளோ! அதை அவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. - பாலகிருஷ்ணன்தான் பேச்சைத் தொடர்ந்தான். ஆமா, நீங்கள் என்னைப் பற்றி இன்று நினைத்ததாகச் சொன்னிர்களே. அது எதனால் என்று கேட்கலாமா? நீங்கள் எழுதிய புத்தகம் ஒன்று அங்கே ஒரு கடையில் இருந்தது. அதைப் பார்த்ததும் உங்கள் நினைப்பு வந்தது. என்று அவள் சொன்னாள். - - 'சந்தோஷம்! என்று ஒப்புக்காக ஒரு சொல் கூறி வைத்தான் அவன். - ஒரு வேண்டுகோள். நிங்கள் கையெழுத்து போட்டுத் தர வேண்டும் என்று பணிவோடு விண்ணப்பித்தாள்