பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ• 58 வெழுத்து) அவன் சிரிப்பு அவள் முகத்தில் செஞ்சாயம் பூசியது. நாணமும் மகிழ்வும் கலந்து மிளிரும் முகத்தோடு எழுந்து நின்ற தேவகியின் அழகும் பண்பும் பாலகிருஷ்ணனுக்கு சந்தோஷம் மட்டும் தானா தந்தன பெருமையும் அளித்தது! 'இப்படியும் ஒரு பைத்தியம் வந்து சேர்ந்ததே ! என்று நினைக்கவில்லை. அவன். தேவகி நல்ல பெண். அருமையான ரசிகை என்றுதான் நினைத்தான். அவன் செயல்களிலே அது தவறு. இது தவறு என்று குற்றம் கண்டு பழக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் மனப் பண்பு சும்மா இருந்து விடுமா என்ன? இப்பொழுதும் அது 'தவறு பற்றிக் குறிப்பிட்டுக்கொண்டுதாணிருந்து. அநேக மாதங்களுக்கு முன்பு கலைக் கழக ஆண்டுவிழாவுக்கு அவன் போனது தவறு என்று பாலகிருஷ்னன் எண்ணி எண்ணி வருத்தப்பட்டானே, அது தவறு என்று இப்பொழுது அவனுடைய மனம் குறிப்பிட்டது: மேடை மீது நின்று என்னவோ உளறியதுகூடத் தவறு இல்லை என்றும் அந்த மனம் பேசியது! பாலகிருஷ்ணன் கலைக் கழக விழாவில் கலந்து கொண்டு மேடை மீது நின்று பேச முன்வந்ததனால்தானே, அருமையான ரசிக ரத்தினம் தேவகியை அடையும் வாய்ப்பு கிட்டியது; அதனால்தான் அவனது பழைய கணிப்பு தவறு என்று அவன் கணக்குப் பண்ண வேண்டியது அவசியமாகி விட்டது. - క్ష