பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத ವಾಹEG] .. & 178 அயர்ந்து உறங்குகிறவர்களை திடுமென எழுப்பினால்தூக்கம் கெடும்படி தொல்லை கொடுத்தால்-கோபம் வருவது இயல்புதானே? சுபாவத்திலேயே முன்கோபக்காரர் அவர். துரங்குகிற பொழுது அவரை யார் எழுப்பினாலும் சரிதான், நரசிங்கம் ஆகத்தான் கண் விழிப்பார் அவர். அருகிலிருந்து எழுப்புவது யார் என்ற பிரக்ஞை பெறுவதற்கு முன்னதாகவே ஓங்கி அறைந்துவிடுவார். வீசிய கை எங்கே பட்டது-கண்ணிலா, மூக்கிலா, கன்னத்தி லா - என்றெல்லாம் கவலை ஏற்படாது அவருக்கு. படிப்படி யாகத் தூக்கம் கலைந்து, வெறி தணிந்து, விழிப்பு ஏற்பட்ட பிறகுதான் அடிபட்டது யார் என்ற கவனிப்பும், அடிக்கநேர்ந்து விட்டதே என்ற வருத்தமும் அவருக்கு உண்டாகும். சில சமயங்களில் கையில் அகப்பட்ட பொருள்களை எடுத்து வீசி, சம்பந்தப்பட்டவர்களைக் காயப்படுத்துவதும் உண்டு. அதன் பிறகு மணிக்கணக் காகவும், நாள் கணக்கிலும் அவர் மனம் நொந்து வருத்தப்படுவதும் உண்டு. அவர் குணத்தை அறிந்தவர்கள் அவரை விட்டு விலகிப்போய் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளக் கற்றுக்கொண்டார்கள். பிள்ளை அவர்களுக்கு ஐம்பது வயசுக்கு அதிகமாகிவிட்டபோதிலும் கோபம் குறைந்துவிடவில்லை. கைலாசம் பிள்ளைக்கு மனைவி மக்கள் என்று யாரும் இல்லை. அவருடைய அக்காள் பாக்கியத்தம்மாள் தான் தம்பி வீட்டு நிர்வாகங்களைக் கவனித்து வந்தாள். அவளுடைய புத்திரபாக்கியமான சிவசைலத்துக்கு வயசு அதிகரித்துக்கொண்டிருந்ததே தவிர அறிவு அபிவிருத்தி யாகவில்லை. பொறுப்பு உணர்ச்சி ஏற்படவுமில்லை. அம்மாவின் அபரிமிதமான அன்பு പ്ര|ബങ്ങിങ്ങ് உருப்படாத வனாக - வளர்த்துவிட்டது. 'மாமாவுக்குப் பிறகு அவருடைய சொத்தெல்லாம் நமக்குத் தானே! என்கிற தைரியம், சுயமாக உழைத்துச் சம்பாதித்து நல்லபடியாக வாழவேண்டும் என்னும் உணர்ச்சி பிறப்பதற்கு அவசியம் இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே, வேளா வேளைக்கு