பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.79 : வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | 'மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, கோயில் காளை மாதிரி சுற்றிக்கொண்டிருந்தான் அவன். பெரிய பிள்னை உபதேசித்துப்பார்த்தார். கண்டித்தார். கோபித்தார். ஒன்றும் பலிக்காமல் போகவே "எக்கேடும்கெடட்டும்! என்று தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார். எனினும், உறவும் உரிமையும் இருந்தது அல்லவா? ஆதலால், சும்மா இருக்க முடியவில்லை. அவரால், போதனைகளும் கிண்டல்களும் உதிர்த்து வந்தார். இதனாலெல்லாம் சிவசைலத்துக்குப் பிள்ளை மீது வருத்தம் உண்டு. மேலும் செலவுக்கு சில்லறைக் காசு தேவைப்படுகிற போதெல்லாம் பெரியவாள் கையை அவன் எதிர் பார்த்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இந்த நிலைமை சுதந்திர உணர்வு உள்ள அவனுடைய 'தன்மானத்தை வெகுவாக பாதிப்பதாக அவன் நம்பினான். கிழவன் செத்த பிறகு சொத்து பூராவும் நமக்குத்தானே வரப் போகுது? அப்படி இருக்கையிலே அவர் ஏன் வீண் பிசினாறித்தனம் பண்ணனும்? காலணாக் காசுக்குக்கூட கணக்குச் சொல்லிவிட்டு அவர்கிட்டேயிருந்து பெறவேணும் என்றால், அது நமக்கு எப்படி ஐயா சரிப்படும்? இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை, இந்தா பாக்கெட் மணி' என்று பணம் கொடுத்துவிட்டால் எவ்வளவு கெளரவமாகவும், பெருந்தன்மையாகவும் இருக்கும் என்று அவன் குறைபட்டுக்கொள்வது வழக்கம். பெரியவருக்கு எப்பொழுதாவது-எப்படியாவது-பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவன் உள்ளம் கறுவிக் கொண்டிருந்தது. பாக்கியத்தம்மாள் ஊரில் இல்லாத போதுதான் இந்த நிகழ்ச்சி நடந்தது. அந்த அம்மாள் புண்ணியம் தேடுவதற்காகவும் சொந்தக்காரர்கள் வீட்டு விசேஷத்துக்கு என்றும், "சும்மானாச்சியும் கூட, அடிக்கடி டுர் போய் விடுவது வழக்கம். அத்தகைய - சந்தர்ப்பங்களில் அடுப்பங்கரை அலுவல்களைக் கவனிப்பதற்கு மூக்கையா பிள்ளை' என்றுதான் அவன் கூறிக்கொள்வான். ஆள்பலே