பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத விளையாட்டு, & 180 எம்டன்! நளபாக வரிசைகளில் மாத்திரம் அல்ல; வாய்ச்சவுடால் அடிப்பதிலும்தான். தாசில் பிள்ளை வீட்டிலே அப்படிச் செய்தேனாக்கும்! கலெக்டர் முதலியார் வீட்டிலே இப்படிச் செய்தேனாக்கும்! சிரஸ்தார் வீடடிலே வேலை பார்த்தேனே அப்ப நான் என்ன செய்தேன் தெரியுமா? என்ற ரீதியில் அளந்து கொட்டுவான். அவனுடைய அளப்புகளும் பண்பாடும் சிவசைலத்துக்கு மிகவும் பிடித்திருந்தன. ஆகவே இரண்டு பேரும் தோழர்கள் ஆகிவிட்டர்கள். இவர்களைத் தவிர, வேலைக்காரன் மாடசாமி தான் அவ்வீட்டில் அதிகமாகப் பழகுகிறவன். அவனுக்கு பெரியபிள்ளையிடம் பக்தி கொஞ்சம்; பயம் அதிகம். அவருடைய கறாரும் கஞ்சத்தனமும் பிடிக்காததனால் தோன்றிய, வெறுப்பும் உண்டு. சிவசைலம் வருங்கால எசமான் என்கிற முறையிலும் சிரித்தும் தாராளமாகப் பேசியும் அவ்வப்போது சில்லரைக் காசு கொடுக்கும் வள்ளல் தனத்தினாலும் மாடசாமியின் மதிப்பையும் பிரியத்தையும் பெற்றிருந்தான். எனவே, சின்ன ஐயாவின் இஷ்டத்துக்கு ஒரளவு இணங்கிப் போகும் சுபாவம் அவனிடம் படிந்து விட்டது. இந்தச் சமபவம் ஒரு வெள்ளிக்கிழமை தான் நிகழ்ந்தது. அந்தி நேரம். கைலாசம் பிள்ளை மாலை மூன்றுமூன்றரை மணி சுமாருக்குப் படுத்து உறங்கத் தொடங்கியவர் எழுந்திருக்கவில்லை. வெள்ளிக்கிழமையும் அதுவுமா, விளக்கு வைக்கிற நேரத்திலே, இப்படியா தூங்குவது நல்ல தூக்கம் வந்தது அம்மா, தன்னை மறந்த தூக்கம்! என்று புலம்புவதற்கோ அக்காள் இல்லை. அதனால், எழுந்திருக்க வேணும் எனும் உள்ளுணர்வு வேலை செய்யவே இல்லை, விளக்கு ஏற்றி இரவில் ஏழுஎட்டு மணி ஆகும் வரைகூட அவர் தூங்கியிருக்கக்கூடும். ஆண்ால் அப்படி நடைபெறவில்லை. . . . " கறுப்புப்பூனை ஒன்று வேறொரு வெள்ளைப்