பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரதாகம் ! & 44 தந்தை லேசாக ஒரு வார்த்தை சொன்னதுமே கல்யாணி மிகுந்த உற்சாகம் காட்டினாள். இந்த ஏற்பாட்டில் தனக்குப் பரிபூரணமான திருப்தி தான் என்பதை வெளிப்படுத்த அவள் தயங்கவே இல்லை. முதலில் கைலாசம்தான் கொஞ்சம் பிகு பண்ணினான். நம்பியாபிள்ளை அவனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னதன் பேரில் இசைந்தான். ஆகவே, கல்யாணி முறைப்படி கைலாசத்தின் வாழ்க்கைத் துணைவி ஆக மாறினாள். அவ்விதம் மாறிய கொஞ்ச காலத்திற்குள்ளேயே அவள் தன் கணவனின் போக்கையே மாற்றி விட்டாள். அவனும் அவள் சொல்கிற யோசனைகளின்படியே நடந்து வந்தான். வேலை இல்லாமல் சும்மா சுற்றித் திரிவது அழகல்ல என்று குறிப்பிட்டு, 'சொந்தமாகச் சிறுகடை ஒன்று வைக்கும்படி செய்துவிட்டாள் கல்யாணி. "கடையில் உட்கார்ந்து கொண்டே உங்கள் பிரமாதமான ஐடியாக்களுக் கெல்லாம் உருவம் கொடுங்களேன். யார் வேண்டாம் என்கிறார்கள்?' என்று அவள் கேட்ட போது, அவள் சொல்வதும் நியாயமே யாகும் என்று தான் கைலாசம் நினைத்தான். கைலாசம் தனது மனைவியின் விருப்பங்களைத் தட்டி நடக்க ஆசைப்பட்டதேயில்லை. யாராவது "என்ன பிரதர், ஆளே மாறி விட்டாற் போல் தெரிகிறதே?” என்று கேட்டால், அவன் மிகவும் அடிபட்டுத் தேர்ந்த அனுபவஸ்தன் மாதிரிப் பேசலானான். "முன்பு எல்லாம் இஷ்டம்போல் அலைந்ததில் தவறு இல்லை. இப்போது மனைவி வந்தாச்சு குடும்பப் பொறுப்பு ஆகிவிட்டது. பிள்ளைகள் பிறந்து விட்டால் சமாளிக்கணும்" என்று நீட்டுவான். "இனிமேல் வேறொருவன் சொல்கிறபடி கேட்டு நடப்பதில்லை; நமது தனித்துவம் என்ன ஆவது? என்று