பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ ws - . § சண்டைக்கோழி | to 56 கறுப்புக் குதிரையை நினைவுக்கு இழுத்து வந்தாள். அவளை ஆசையோடு பார்க்கத் துடிக்கும் கண்கள் கூட, அவள் நேருக்கு நேராக ஒரு பார்வை பார்த்த உடனேயே வெல வெலத்து விடும். அவளிடம் எல்லோருக்கும் மதிப்பும் ஒருவித அச்சமும் ஏற்பட்டிருந்தன. - . மூக்கத் தேவர் மகள் என்ற அந்தஸ்தும் இதற்கு ஒரு காரணம்தான். ரொம்பவும் பொல்லாத்வர் என்று பெயர் எடுத்தவர் தேவர். தேவருக்கு வயது அதிகமாகி விட்ட போதிலும் அவருடைய பழங்கதை நிரந்தரப் பசுமையோடு தான் வாழ்ந்து வந்தது. அவரைப் பற்றி கல்லுளி மங்கன் என்றும், மலைக் கோப்பன் என்றும், பெரிய கில்லாடி என்றும் குறிப்பிட்டுப் பேசுவார்கள். ஊரில் எங்காவது ஒரு மூலையில் சண்டை கிளம்பினாலும் தேவர் குரல் தான் ஓங்கி ஒலிக்கும் அங்கே வாய் வீச்சு முற்றிக் கைவீச்சாகப் பரிணமிக்கிற இடங்களில் எல்லாம் முதல் அடியும் தேவருடையதாகத் தான் பாயும்; இறுதி அடியும் அவர் கையிலிருந்து விழும். கோபத்தோடு குணமும் இருந்தது அவரிடம், முரட்டு கபாவத்தோடு அன்பு உள்ளமும் பெற்றிருந்தார் அவர். இவற்றினால் மட்டுமே தேவர் அவ்வூராரின் மதிப்பையும், மரியாதையையும், பயத்தையும் பெற்றிருந்தார் என்று சொல்லிவிட முடியாது. அவருடைய செல்வாக்குக்கு முக்கிய காரணம் அவர் வளர்த்து வந்த சண்டைச் சேவல்' তf"r. அந்த ஊரிலும் சற்றுப் பக்கத்தில் உள்ள பல ஊர்களிலும் எத்தன்னை எத்தனையோ கோழிச் சண்டைகள் நடந்தன. அத்தனை சண்டைகளிலும் வெற்றிக் கொடி நாட்டி வீர முழக்கம் செய்த பெருமை தேவரின் சேவலுக்கே உரியது. - 'அப்பன் குண மெல்லாம் மகளிடமும் குடி கொண்டிருக்கு" என்று தான் முருகையாவும் எண்ணினான்.