பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 & வல்லிக்கண்ணனின்னைகதைகள்) புரிந்து கொள்ள இயலவில்லை. அன்று சாயங்காலம் முருகையாவைத் தேடி வந்தார் மூக்கத்தேவர். எதிர்பாராத அவ்வருகை அவனுக்குத் திகைப்பு தந்தது. போட்டிக்கு அழைத்து, அவருடைய சேவலைப் பற்றி இழிவாக வெல்லாம் பேசித் திரிந்ததற்கு அவர் தம் மீது கோபம் கொண்டிருப்பார் என்றுதான் அவன் எண்ணியிருந்தான். தேவர் அவன் பேரில் பகை எதுவும் பாராட்டவில்லை. அன்போடு தான் பேசினார். அவர் அவனிடம் அறிவித்த விருப்பமும் அவனுக்கு ஆச்சரியமே அளித்தது. . “முருகா, செல்லத்தைக் கல்யாணம் செய்து கொள்வதில் உனக்கு ஆட்சேபம் ஏதாவது உண்டா?” என்று தேவர் கேட்டபோது, என்ன பதில் சொல்வது என்றே அவனுக்கு விளங்கவில்லை பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு பேசினான். "செல்லத்தின் இஷ்டம் எப்படி இருக்குமோ?” என்று இழுத்தான். - “செல்லம் என்ன சொல்லப் போகிறா?’ என்று அலட்சியமாகச் சொன்னார் தேவர். "அவளுக்கு என்கிட்டே பிரியம் எதுவும் இருப்பதாக எனக்குத் தோணலே, வெறுப்புத்தான்." என்று ஆரம்பித்தான் அவன். மூக்கத்தேவர் பெரும் சிரிப்புச் சிரித்து அடக்கினார் அவன் பேச்சை "உனக்கு அனுபவம் போதாது, முருகா. உனக்கு எவ்வளவோ விஷயங்கள் புரியாது. முக்கியமாக, பெண்களுடைய மனசைப் புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் உனக்கு இன்னும் ஏற்படலே. செல்லம் உன்னை வெறுக்கிறாள் என்கிறே. உன் மேலே வெறுப்பு இருப்பது போல் அவள் காட்டிக் கொள்வதும் வாஸ்தவம் தான். ஆனால் இதுக்கெல்லாம் அடிப்படை என்ன என்று பார்த்தால், அவளுக்கு உன் மீது உள்ள ஆசை தான் காரணமின்னு புரியும் இல்லைன்னு சொன்னால் எதுக்காக