பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 崔发箱

அன்பு நண்பர் கிருஷ்ணன்,

வணக்கம். புத்தாண்டு தினம் வந்தது. பொங்கல் நாள் வந்தது. எல்லாம் காலப் பாழில் கலந்தும் போயின. வழக்கம் போல் சகல துறைகளிலும் காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

"தினமணி கதிர் எட்டவாவது தி.க.சி. கொண்டு வந்தால் பார்ப்பேன். இந்த வாரம் பார்க்கக் கிடைத்தது. டிவி நிகழ்ச்சிகளில் புதிய புராணங்கள் பற்றி நீங்கள் எழுதியிருப்பது சரியான சிந்தனை. சுட்டிக் காட்டப்பட வேண்டிய குறைபாடுகள்.

சக்தி தேவிகள் பேராலும், ஐயப்பன் பேராலும், ஏகபேராலும் புதிய புராணங்கள் தயாரித்து, மக்களின் நம்பிக்கையை ஆதாரமாக்கி தங்கள் பணவசூலை பெருக்கிக் கொள்வதிலேயே கருத்தாக இருக்கிறார்கள் படத் தயாரிப்பாளர்கள். இதை நீங்கள் விரிவாக எடுத்துக்காட்டியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அடுத்து "ஐயப்ப பக்தி என்று நாடு நெடுகிலும் பரவிவிட்ட போவி பக்திமுறை பற்றியும் சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறீர்கள். விரதம்-ஆசாரம், மது-மாமிசம்-மங்கை தொடாமை என்று 40 நாட்கள் அனுஷ்டித்து விட்டு, எப்படா மலைக்கு போய்விட்டு திரும்புவோம்; மூன்று "ம"களையும் வெறியோடு அனுபவிப்போம் என்று திரிகிற "சாமி”கள் போக்கு ஒழுக்கம், புலனடக்கம், கட்டுப்பாடு இவற்றுக்காக ஏற்பட்டது ஐயப்ப பூஜை என்றாகுமானால், மலைக்குப் போய் வந்த பிறகும்-வாழ்நாள் முழுவதும் இவை ஒழுங்காக அனுஷ்டிக்கப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே.

'காய்ந்த மாடு கம்புலே விழுந்த மாதிரி" மும்முரமாக ஈடுபடுகிறார்கள். பட்டினி கிடந்ததுக்கு (விரதம் அனுஷ்டித்து நாட்களை வீணாக்கி விட்டதற்கு பழிவாங்குவது மாதிரி சுகபோகங்களை அனுபவிக்க அலைகிறார்கள்.

இன்னொன்று ஐயப்ப பக்தியால் சமத்துவம் வளர்கிறது; எந்த சாதியானாலும், ஏழை பணக்காரன் எனினும், பரஸ்பரம் என்று கூறிக்கும்பிட்டுப் பழகுகிறார்கள் என்கிறார்கள்.

இதுவும் ஒரு மண்டல் வேஷ நடவடிக்கை தான். சாதிப் பாகுபாடும். தொழில் முறை ஏமாற்றுகளும், பூஜை நாட்கள் முடிந்தபிறகு ஜாம்ஜாம் என்று பக்தர்கள் மத்தியில் கோலோச்சுகின்றன!

ஆகவே, ஐயப்பன் பக்தி என்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிற வியாபாரமாகத் தான் இருக்கிறது. அது ஒரு "ஃபாஷன் ப்ளே” ஆகிவிட்டது.