பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2(; வல்லிக்கண்ணன்

திருப்பூர் கிருஷ்ணன்

محصر

அன்பு நண்பர் கிருஷ்ணன்,

வணக்கம்.

உங்களை அடிக்கடி கண்டுபேச வாய்ப்பு இல்லை எனினும், மாதம் ஒரு கடிதம் எழுதி உங்கள் பொன்னான காலத்தை சிறிது கொலை பண்ணலாமே என்று நான் எண்ணுவது உண்டு. ஆனால் இதுவரை அப்படிச் செய்யவில்லை. (இனி செய்தாலும் செய்வேன்!)

செப்டம்பரிலேயே உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்க வேண்டும் செப்.3-ம் தேதி நான் திருப்பூரில் இருந்தேன்.

திருப்பூருக்கு நான் "விஜயம் செய்தது” இது மூன்றாவது தடவை. முதல் முறை 1954 வாக்கில்.

அப்புறம் பத்து வருடங்களுக்குப் பிறகு ஒரு முறை போனேன். இப்ப் மூன்றாவது தடவையாகப் போனபோது, எல்லா நகரங்களையும் போல திருப்பூரும் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கக் கண்டேன்.

திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. நகரப் பள்ளியில், ஒன்றரை மணி நேரம், "இன்றைய தமிழ் இலக்கியம்" பற்றி அளந்தேன். சுமார் 60பேர் வந்திருந்தனர். ரொம்பவும் ரசித்தார்கள்.

தலைமை வகித்த திருப்பூர் நகரசபை தலைவர் கந்தசாமி பி.ஏ, பி.எல் உம், மற்றொரு பேராசிரியரும் எனது பேச்சாற்றலைக் கேட்டு வியந்து பாராட்டினார்கள். என் பேச்சாற்றலின் தன்மை எனக்குத் தெரியும். மற்றவர்கள் அதை பெரிதும் வியந்து பாராட்டுவது தான் எனக்கு வியப்பான விஷயம். எப்பவுமே!

செயலர் பாலகிருஷ்ணன் உங்களை நன்கு தெரியும் என்று சொன்னார். திருப்பூர் இளைஞர்கள் மிகுந்த உற்சாகிகளாகக் காணப்பட்டார்கள். இலக்கிய ஈடுபாடு உடைய அநேகர் வந்து பேசி

"பொதுவாக இவ்வளவு பேர் நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள். உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இன்று பலர் வந்திருக்கிறார்கள்" என்று பாலகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். சந்தோஷமாக இருந்தது.

அன்பு

6.. 5.