பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$24. வல்லிக்கண்ணன்

ரா. சு. கோமதிநாயகம்

புவனேஸ்வர் 2ア-2-79

அன்பு மிக்க அண்ணா,

வணக்கம். நான் 24 சனியன்று அனுப்பிய கவரும் இன்லண்டும் கிடைத்திருக்கும். சனிக்கிழமை இங்கு திடீரென்ற பருவநிலை மாறுதல் ஏற்பட்டது. மழை பெய்தது. அதனால் குளிர் தலைகாட்டியது.

அன்று மாலை தாரித்திரி என்ற பத்திரிகைக்காரர்கள் பரிசு பெற்றவர்களுக்கு ஒரு வரவேற்பு அளித்தார்கள். கவர்னர் தலைமை வகித்தார். என்னைச் சோத்து மூன்று பேர்தான் பரிசு பெற்றவர்கள். மற்றவர்கள் வரவில்லை. கூட்டம் இருந்தது. அதில் தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நானும் இங்கிலீஷில் பேசினேன். சில நிமிஷங்கள். நான் இங்கிலீஷில் கூட்டத்தில் பேசியது இதுதான் முதல் தடவை. வெற்றிகரமாக அமைந்தது. கூட்டம் முடிந்தபோது மணி 8-30. மழை தூற்றிக் கொண்டிருந்தது. இருந்தாலும், நனைந்தவாறே புஷ்பக் ஒட்டலுக்கு நடந்து வந்தோம். 2 மைல் துரம்.

சனி, ஞாயிறு பிற்பகல் சாப்பாடு அகாடமி ஏற்பாடு செய்திருந்த விருந்தில், ஸ்டேட் கெஸ்ட் ஹவுசில். பிரமாதமான விருந்து ஞாயிறு மாலை விழா. ரவீந்திர மண்டபத்தில். இது ரூமிலிருநது ஒன்றரை மைல் துரம், தினம் நாங்கள் நடந்து போய் வந்தோம். விழாவில் கூட்டம் நிறைந்திருந்தது. ஹைதராபாதில், போன வருடம், ஆட்கள் ரொம்பவும் குறைவாகவே வந்திருந்தார்களாம். பரிசளிப்பு, பேச்சு எல்லாம் முடிந்த பிறகு, ஒரிஸா நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அழகாகவும் அருமையாகவும் இருந்தது. 10 மணிக்கு ரூமுக்கு வந்தோம்.

திங்களன்று அகாடமி ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸில் 55 பேர் கோனார்க், பூரி-இரண்டு இடங்களுக்கும் போய் வந்தோம். கோனார்க் 'ஸன் டெம்பிள் பத்திரிகைகளில், படங்களில் பார்த்த போது பாதித்ததை விட நேரில் பார்க்கிற போது பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. மாபெரும் மனித சாதனை. காலத்தாலும் மனிதர்களாலும் சிதைக்கப்பட்டுள்ளது. காஜுராஹோ கட்டிடங்களில் இருப்பது போலவே இங்கும் நிறைய காம உறவுச் சிற்பங்கள் உள்ளன.

மத்தியான உணவு பூரி டுரிஸ்ட் ஹவுசில் அகாடமி விருந்து. ஹவுஸ்" கடற்கரையில் இருக்கிறது. கடலோரம் ரொம்ப அழகாக உள்ளது.

பூரி கோயில் ரொம்பப் பெரியது. உயரமானது. சாமிகள்-ஜெகன்னாதர் (கிருஷ்ணன்), பலராமர், சுபத்ரா-கடவுளம்சம்' கொண்ட சிலைகளாக இல்லை. மரத்தில் உருவாக்கப்பட்ட, ஆர்வகுடிகள்