பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 129

ராஜவல்லிபுரம்

27-2-85

அன்பு மிக்க அண்ணா,

வணக்கம். நீங்கள் அனுப்பிய 2 விரிவான கடிதங்களும் ஒன்றாக நேற்று வந்து சேர்ந்தன. எல்லா விஷயங்களையும் விளக்கமாக எழுதியிருப்பது சந்தோஷம் தருகிறது. நன்றி. இமயப் பதிப்பகம் கடிதம் வந்தது. விசேஷமாக ஒன்றும் இல்லை. எனது இலக்கிய அனுபவங்களை இன்னும் அச்சுக்கு எடுக்கவில்லை; அதை வல்லிக்கண்ணன் போராட்டங்கள் என்ற தலைப்பில் வெளியிடலாம் என்று நினைக்கிறேன்; உங்கள் கருத்தை எழுதுங்கள்; பதில் வந்ததும் அச்சுவேலை ஆரம்பித்துவிடுகிறேன் என்று வீரராகவன் எழுதியிருந்தார். உங்கள் இஷ்டம் போல் செய்யுங்கள் என்று பதில் எழுதினேன்.

சில விஷயங்களை எழுத வேண்டும் என்ற நினைப்பு இருந்த போதிலும், ஒவ்வொரு கடிதத்திலும் வேறு பல விஷயங்கள் இடம்பிடித்து விடுவதால், முன்னவை எழுதப்படாமல் கிடப்பிலேயே கிடந்து போகின்றன. அப்படிப்பட்ட மூன்று விஷயங்கள் - 1. தாழையூத்து ரயிலடிப் பக்கம் லென்னக் அன் கம்பெனி என்று நமக்கெல்லாம் அறிமுகமாகியிருந்த இப்போதையப் பேர்வழிகளுக்கு ஏதோ பழைய கட்டிடம் என்றே தெரிய வருகிற - பாழ்மைத் தோற்றமும் பழுதடைந்த நிலையும் கொண்ட புராதனக் கட்டிடம், அதன் வரலாற்றில் வெவ்வேறு ரக அனுபவங்களைப் பெற்று வருகிறது. முதலில் வெள்ளைக்காரனின் கம்பெனியாய் ராஜரீகமாக வாழ்ந்த கட்டிடம், பிறகு அடைத்துப் போடப்பட்டு, அழுது வழியும் இடம் ஆகி, 1950களில் எக்ஸ் சர்வீஸ்மென் தச்சுப் பட்டறை ஆக விளங்கியது. முன்னாள் போர் வீரர்கள் தொழிற்காரர்களால் சில வருடங்கள் நடமாட உதவிய அது, 1960களில் சங்கர் பாலிடெக்னிக் ஆக மாறியது. புதிய தொழிற்பயிற்சியாளர்கள் உற்பத்தியாக உதவிப் பிறகு மீண்டும் அடைபட்டுக் கிடந்தது. இப்போது, சிலோன் அகதிகள் தங்கும் முகாம் ஆக அது மாறியிருக்கிறது. பிள்ளைகள் மிக நிறைய விசித்திர உடைகளில் பல வயது, பல பருவ, பெண்கள். லுங்கியும் பனியனும் அணிந்த ஆண்கள். எப்பவும் சோம்பேறிகளாய் நின்றும், உட்கார்ந்தும், உலவியும் காட்சி தரும் இடமாகியுள்ளது. வரிசையாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் புதிய சேர்மானம். வறுமை நிறைந்த தமிழகத்தை மேலும் வறுமையானதாய் காட்டச் சேர்ந்திருக்கும் இது போன்ற நபர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்னை எப்படித் தீர்கிறதோ!

2. கொக்கிரகுளத்தில், கோர்ட் கட்டிடங்களை ஒட்டி, புதுமையான,

நாகரிக மாடல் கட்டிடம் ஒன்று இருப்பது பற்றி முன்பு எழுதினேன். அதன் சரியான பெயர் மாவட்ட அறிவியல் மையம் (District Science