பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 வல்லிக்கண்ணன்

Centre). சுற்றிலும் தோட்டங்கள், பயிர்கள், பூச்செடிகள், ஆராய்ச்சி சாதனங்கள் கொண்டுள்ளது. மத்திய அரசு ஆதரவு பெற்றதாக இருக்கும் போலும்,

3. இங்கு துணைக் கலெக்டராக இருந்த குர்ணிகால் சிங் முரட்டுத் துணிச்சலோடு பல சாதனைகள் செய்தார். முக்கியமான - அதி எடுப்பான - உதாரணம் பிரதான இடத்தில் ஜாம்ஜாம் என்று நடந்து கொண்டிருந்த ராஜ்கபே ஒட்டலை இட ஆக்கிரமிப்பு என்று சொல்லி - குளோஸ் பண்ணச் செய்து, அந்தக் கட்டிடத்தையே இடித்துத் தகர்த்தது. இந்துக் கல்லூரி காம்பவுண்டுச் சுவரை இடித்து, உள்ளே தள்ளிக் கட்ட வைத்தது: கறையான் அரிப்பிலிருந்து தப்பியவை பற்றிராதாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

ராஜவல்லிபுரம் 26-4-86

அன்பு மிக்க அண்ணா, வணக்கம்.

எனக்கு நீங்கள் திருச்சிக்கு அனுப்பிய 2/4 கடிதம் 23ல் கிடைத்தது. நான் 24 வியாழன்) திருச்சியிலிருந்து 10 மணிக்கு பஸ்ஸில் புறப்பட்டேன். 4 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷன் வந்து சேர்ந்தேன். 16-ம் தேதி போன போது, ஜங்ஷனில் 8 மணிக்குப் புறப்பட்டது பஸ். 3 மணிக்கு திருச்சி சேர்ந்தது. 7மணிநேரம் திரும்பிய போது 6 மணி நேரம்தான். திருச்சியில் 5 நாட்கள் தான் தங்க நேரிடும்; வருகிற போது திண்டுக்கல்லில் இறங்கி, கமலவேலனை பார்த்து விட்ட வரலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், திருச்சியிலேயே 8 நாட்கள் ஆகிவிட்டன. ஆகவே, நேரே ஊருக்கு வந்துவிட்டேன். திருச்சியில் மனோகரமான, இனிய அனுபவங்கள். இளசை சுந்தரம் வீட்டில் தான் தங்கினேன். ஒரு தனி அறை எனக்குத் தரப்பட்டது. 16-ம் தேதி போய் சேர்ந்த அன்று மநரா. வீட்டில் தங்கினேன். அவர் இருக்கிற வீடு வசதியானது; வெளிச்சம் மிகுந்தது. பிறகு 2 இரவுகள் அவர் வீட்டில் தங்கினேன். மநரா. காலை 8மணிக்கு ஆபீஸ் போய்விடுவார். மாலை 5% மணிக்குத் திரும்புவார். வீட்டில் இருக்கிற நேரமெல்லாம் கலர் டிவி பார்த்துக் கொண்டிருப்பார். இப்போதெல்லாம் படிப்பதில் அவருக்கு அதிகம் ஆர்வம் இல்லை. வெள்ளியன்று டிவியில் கிரிக்கட் பார்ப்பதற்காக லீவு எடுத்துவிட்டார். அன்று நான் அவர் வீட்டில் இருந்தேன். புகழேணிக்கான பேட்டியை ஞாயிறு அன்று சுந்தரம் பதிவு செய்து கொண்டார். அது ஜூன் 16 திங்கள்