பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் #37

பாழாகின்றன. சொத்து, நகைகள், பணம் பாழ்பட்டுப் போகின்றன.

நாசமாய்ப் போவது என்பதும் வாழ்க்கையில் சகஜம் தவிர்க்க முடியாதிது.

நான் சேர்த்து வைத்த புத்தகங்கள் கறையான் பூச்சிகளால் அரித்து அழிக்கப்பட்டதும் இயல்பானது தான்.

இப்படி மனம் தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறது.

அன்பு

છે?, 6,

"சனிக்கிழமை இரவு 8-03 மணிக்கு ரேடியோவில் நான் வாசித்த 'வாடாமலர் கதையை இந்த ஊரில் பலர் கேட்டுவிட்டு, ஹரிஹரி, ரேடியோவில் பேசினிகளே! என்றார்கள்.

ராஜவல்லிபுரம் #2-3-36 அன்பு மிக்க சண்முகவடிவு,

நான் 5-ம் தேதி அப்பாவுக்கும், உனக்கும் எழுதிய கடிதங்கள் கிடைத்திருக்கும். இன்று அப்பாவுக்கும் தனியாக ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.

7-ம் தேதி காலை நான் நாகர்கோவில் பஸ்ஸில் பயனம் செய்தேன். பாளையங்கோட்டைக்கு அப்பால், பெருமாள்புரம் தாண்டியதும், புதிய புதிய புரம்களும் நகர்'களும் தோன்றியுள்ளன. இன்னும் தோன்றும். மைல் கணக்கிலே பொட்டல் நிலத்தை வாங்கி, வளைத்துப் போட்டு, காங்கிரீட் தூண்கள் நிறுத்தி, V..ேபன்னீர்தாஸ் டவுண் என்று ஏகப்பட்ட பெயர்ப்பலகைகளை நட்டு வைத் திருக்கிறான் அவன். பன்னிர்தாஸ் டவுணில், செல்விதகர், மாத்யூநகர், கே.கேநகர் என்றெல்லாம் பிரிவுகள் வேறு. இப்போது ஒரு கட்டிடம் கூட இல்லை. ஒரு மரம் கூட இல்லை. அவனுடைய கனவு-டவுண்' இன்னும் பல வருடங்களில் உருவாகிவிடும். காலவேகமும் ஜனப்பெருக்கமும் இதை சாத்தியமாக்கிவிடும். நாகர்கோவிலில் 10-40க்கு புறப்பட்டது திருவனந்தபுரம் பஸ், நாங்குனேரி, வள்ளியூர், பணகுடி போன்ற தமிழ்நாட்டு ஊர்கள் எப்பவும் போல் வறண்டு, புழுதிமயமாய், இனிமையற்றே இருக்கின்றன.

நாகர்கோவிலை நெருங்கநெருங்க சூழ்நிலை குளுமை பெறும். தென்னைகள், வாழைத்தோப்புகள், நெடுகிலும் மலைகள், வயல்கள்