பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 வல்லிக்கண்ணன்

தி. க. சிவசங்கரன்

சென்னை.

14–7–93

அன்புச் சகோதர,

வணக்கம், எனது நேற்றையக் கடிதம் கிடைத்திருக்கும்.

நீங்கள் சென்னையை விட்டுப் புறப்பட வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அநேகமாக இதுதான் நான் உங்களுக்கு ஆதம்பாக்கம் முகவரிக்கு இம்முறை எழுதுகிற கடைசிக் கடிதமாக இருக்கும்.

5 மாதங்கள் ஒடியிருக்கின்றன. 5 மாதங்கள் நீங்கள் சென்னையில் தங்கிய போதிலும், 4 மாதங்களில் சென்னையில் இல்லாதது மாதிரித் தான், உங்கள் வீட்டோடு தான் நாட்கள் போயிருக்கின்றன. -

உங்களுடைய ஆயுசு பலத்தினாலும், நல்ல காலத்தாலும்,தேர்ந்த மருத்துவ சிகிச்சை-மருந்துகள்-உறவினரின் அன்பான கவனிப்புகள் ஆகியவற்றாலும், பரவலாக நெடுகிலும் உள்ள உங்கள் நண்பர்களின் உளப்பூர்வமான வேண்டுதல் பலத்தாலும்,உங்களுக்கு வந்த பெரும் விபத்து நீங்கி நீங்கள் இயல்புநிலை அடைந்திருக்கிறீர்கள். இது எல்லோருக்கும் சந்தோஷமான விஷயம்.

நீங்கள் நல்லபடியாக பயணம் செய்து, சுகமாக திருநெல்வேலி சேர்ந்து, சொந்த ஊர்- சொந்த வீடு-சொந்தக்காரர்கள் சூழலில் ஆரோக்கிய நிலையை மீண்டும் நன்கு பெற்று, இயல்பான அலுவல்களில் உங்கள் இயல்புகளின்படி ஈடுபட்டு, சந்தோஷமாக வாழவேண்டும். காலம் அதற்குத் துணை புரியட்டும்.

மனித உடலும் இயந்திரம் தான். ஆனால் உயிருள்ள இயந்திரம். தன்னைத் தற்காத்துக்கொள்ளும் ஆற்றலும், பாதிப்புகளை தேய்வுகளை தாங்கிக் கொண்டு, பழுதுகளை சீர்செய்து கொள்ளும் சக்தியும் பெற்றிருக்கிறது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அது தன்னிலை இழந்து தட்டழிந்து போவதும் நடக்கிறது. ஏதேதோ நோய்கள் என்னென்னவோ காரணங்கள் சிலை 'கு மேலே போனால், எந்த மருத்துவமும் எந்த மருந்தும் எதுவும் செய்ய இயலாமல் போகிறது.

'புதிய பார்வை'யில் ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் பற்றி அசோகமித்திரன் எழுதிய கட்டுரையைப் படித்திருப்பீர்கள். என்னவோ அபானியாவாம். பேசமுடியாது. எழுதமுடியாது.