பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் # 3

நினைவுத்திறன் குறைகிறது. ஆயினும் நடக்கலாம், சாப்பிடலாம், படுக்கையில் கிடந்து தூங்கலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கை எப்படி ஆகிப்போய்விட்டது! மனித யந்திரம் எவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளது!

என்ன தான் எச்சரிக்கையாக இருந்தாலும், வருவதுவந்தே தீரும் என்கிற தத்துவம் இருக்கவே இருக்கிறது! அதுக்காக நாம் எச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டியதில்லை என்றாகி விடாது.

எனக்கு சில நாட்களாக உற்சாகம் குறைந்துபோச்சு. உப்பே சப்பிட்டுப்போனால் அதை எப்பண்டம் கொண்டு சுவையேற்ற (pug-usib? (When salt loseth its savour with which it can be salteth?Bible) அதே போல பலருக்கும் உற்சாகமூட்டி வரும் சக்தியாக மதிக்கப்படுகிற நானே உற்சாகமிழந்து போனால், யார் எனக்கு உற்சாகம் தர இயலும்?

நானே தான் என் உள்ளத்தினுள்ளேயே எனக்குரிய உற்சாகத்தை ஆக்கியே தீரவேண்டும், அதற்காகத் தான் இது மாதிரி கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

அன்பு

డ}}. శ్రీ.

சென்னை

4-9-93 பிரிய சகோதர, வணக்கம், வழக்கமாகக் கடிதம் எழுதுகிறவர்கள்

எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். வருகிற பத்திரிகைகள் வந்து கொண்டே இருக்கின்றன. புத்தகங்களும் நிறையவே வருகின்றன. முன்னுரை கோருவோர் முன்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்! கைவசம் முன்னுரைக்காக இருப்பது 'கவிதையின் பரிமாணங்கள்' நெல்லை. சு. முத்து கட்டுரைகள்.

நானும் வழக்கம்போல் வாழ்கிறேன் - சும்மா, எதுவும் செய்யாமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல், படுத்துக்கிடப்பது போன்ற சுகம் வேறு எதுவுமே கிடையாது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தபடி! - -

வானொலி, டி.வி எல்லாம் அதிர்ஷ்டசாலிகள் வீட்டில் பணமழை பொழிய உதவும் சாதனங்கள். வ.க.வுக்கும் அவற்றுக்கும்