பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

f

§

2

交 - 3. - * * - : عyما இ. % 3 _ _& یُ. ۔نگر ،یہ t; や காட்டப்படுகின்றன. பெண்கள் செய்கிற சர்க்கஸ் வேலைகள்

பிரமாதம்! அபாரம்:

திருச்சியில் ஆண்பாவம் சினிமா பார்த்ததுக்குப் பிறகு ஒருநாள் uெaret என்ற இங்கிலீஷ் படமும் பார்த்தேன். 1927-ம் வருட பாரிஸ் நகர ஒட்டல்களில் நடைபெறுவதாகக் கதை, குடிப்பது, டான்ஸ் ஆடுவது, பெண்கள் செக்சியாக உடல்வெளிச்சம் போடுவது முதலிய காட்சிகள் தான் நிறைய. பழங்கால பாரிஸ் நகரச் சூழ்நிலை மற்றும் டிரஸ்கள் முதலியன சிரத்தையுடன் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

அன்பு

ఢ, .

1?-6–86

அன்புள்ள ராதா,

உனக்கு கல்லூரி 27-ம் தேதி திறக்கும் என்பதை உன் கடிதம் மூலம் அறிந்தேன். நாட்கள் ஓடிவிட்டன. இன்னும் சில தினங்கள் தானே!

1986லும் ஜூன் மாதமும் பறந்து கொண்டிருக்கிறது. நான் இந்த ஊருக்கு வந்து 4 மாதங்கள் முடிந்து மேலும் சில தினங்கள் ஆகிவிட்டன.

நான் இங்கே வந்த 50வது நாளை கொண்டாடியது பற்றி முன்பு எழுதியிருந்தேன். நூறாவது நாளை மேலும் சிறப்பாகக் கொண்டாடியிருக்க வேண்டும் அல்லவா!

ஆனால் அப்போது நான் இவ்வூரில் இல்லை. அந்த வாரம் பூராவுமே விசேஷ கொண்டாட்டமாகத் தான் கழிந்தது - பூரீவில்லி புத்துரிலும் ராமச்சந்திரபுரத்திலும். இப்போது ஏதாவது கொண்டாட்டம் நடத்தலாமா என்று நினைத்தேன். நான் சர்க்கார் விவசாய டிமான்ஸ்ட்ரேட்டர் ஆபீஸ் வேலையை விட்டு 45 வருடங்கள் இந்த ஜூனில் முடிகின்றன என்கிற மாபெரும் விஷயம் நினைவுக்கு வந்தது.

ஆகா, ஆகா, அருமையான விஷயமாச்சே என்று மனம் கும்மாளி போட்டது. சரி, கொண்டாட வேண்டியது தான்; எப்படி கொண்டாடலாம் என்ற எண்ணம் எழுந்தது.