பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 35i

ராஜவல்லிபுரம் 3-5-86

அன்புள்ள ராதா,

பரீட்சைகள் முடிந்து ‘ஹாயாக இருப்பாய். பொழுது போவதற்குப் பத்திரிகைகளும் புத்தகங்களும் தான் துணை. வேறு என்ன செய்வது! எங்கே போக முடியும்?

ஹாலி வால் நட்சத்திரம் வெறும் கண்ணுக்குப் புலனாகும் என்று சொல்லப்பட்ட போதிலும், அதை பார்த்தவர் எவரையும் இதுவரை நான் சந்தித்ததில்லை. பல ஊர்களிலும் பல பேர்களிடமும் கேட்டு வருகிறேன்.

திருச்சியில் ம.த.ராமசாமி குடியிருக்கிற வீடு அருமையான இடம் நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு வெட்டவெளி நடுவே தனி வீடு மொட்டைமாடியும் இருக்கிறது. வானக் கூடாரம் கவிந்து முழுமையும் கண்களில் படுகிறது. ஆனாலும், யாரும் ஹாலி வால்நட்சத்திரத்தைப் பார்க்கவில்லை.

'பணிமேகம் எப்பவும் கவிந்திருந்தது நட்சத்திரம் தென்படவேயில்லை. டெலிவிஷனில் ஒவ்வொரு நட்டிலும் எப்படித் தெரிந்தது, சோவியத் ரஷ்யாவில் தெரிந்தது, அங்கே தெரிந்தது, இங்கே தெரிந்தது என்று பிடித்துக்காட்டிக் கொண்டிருந்தார்கள் நன்றாக இருந்தது என்று ராமசாமி சொன்னார்.

'ஹாலி வால் நட்சத்திரம் வெறும் கண்களுக்குத் தெரியும் என்று அறிவிக்கப்பட்டது. அது எப்படி எப்படித் தெரிகிறது என்து ரேடியோவில் நேர்முக வர்ணனை கொடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்திருந்தோம், மேக மூட்டம் காரணமாக நட்சத்திரம் பார்வையில் படவேயில்லை. காலலுரர் அப்சர்வேட்டரியிலிருந்து தொடர் அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள். தாங்கள் வால் நட்சத்திரத்தை வெறும் கண்களாலேயே பார்க்கிறோம்; இந்த இடத்தில் இப்படி இருக்கிறது. நீங்களும் பார்க்கலாம் என்றார்கள். ஆனால் திருச்சியில் அது தெரியவேயில்லை என்று இளசை சுந்தரம் தெரிவித்தார்.

கலர் டி.வி.யில் விளம்பரங்களில், விளம்பரங்களுக்கு முன்னாலும் பின்னாலும், டிசைன் டிசைனாக மாறியும் இணைந்தும் பிரிந்தும் விதம்விதமாக ஒளிபரப்பாகிற காட்சி அமைப்புகள் அழகாக இருக்கின்றன. பெரும்பாலும் எல்லாம் இந்தி நிகழ்ச்சிகள் தான். காட்டப்படுகிற இந்தி சினிமாப்படங்கள் அறுவை தான். சீனப் பெண்களின் ஜிம்னாஸ் டிக் ஸ் என்று உடற்பயிற்சி

Tمبر

வித்தைகள்-வாரத்துக்கு ஒரு தடவை - மாலை 6 முதல் 5-15 வரை