பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; Sto வல்லிக்கண்ணன்

ராஜவல்லிபுரம் 24.3.86

அன்புள்ள ராதா,

உனது 20ம் தேதிக் கடிதம் மிகுந்த மகிழ்ச்சி தந்தது. மோனகன் ஸ்கூலில் வகுப்பில் முதன்மையாக நீ மதிப்பெண்கள் பெற்றதற்காக புத்தகங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டதை அறிந்து சந்தோஷப்படுகிறேன். பாராட்டுக்கள்.

நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பதை அறிய மகிழ்ச்சி. நானும் தலம். -

ஹாலி வால் நட்சத்திரத்தை நான் பார்க்கவில்லை. வெறும் கண்களுக்கு அது புலனாகாது என்று சில மாதங்களுக்கு முன்பு சொன்னார்கள். பிப்ரவரியிலிருந்து அந்த நட்சத்திரம் பற்றிய செய்தி எதுவும் எனக்குத் தெரியாது.

தினசரி அதிகாலை 5.30 மணிக்குத் தான் நான் வீட்டை விட்டுப் புறப்படுகிறேன். அப்போதும் நல்ல இருட்டுதான். சில நாள் மூடுபனி புகைப்படலமாய் கவிந்து காணப்படும். விடிந்து வெகுநேரம் வரைகூட கீழ்வானில் மேகங்கள் திட்டுதிட்டாகப் படிந்து கிடக்கும். தட்சத்திரங்கள் தெரியமாட்டா. மிகப் பிரகாசமாக மிளிரக் கூடிய விடிவெள்ளி கூட மங்கலாகத் தான் தெரியும். இந்தச் சூழ்நிலையில் இயல்பாகவே மங்கலாகத் தெரியும் ஹாலி வால் நட்சத்திரம் பார்வைக்குத் தென்படுவது சாத்தியம் இல்லை.

சூரிய உதயம் கூட ஒவ்வொரு நாளும் பளீரெனத் தெரிவதில்லை. அடிவானத்தை விட்டு மேலே சிறிது உயரம் வந்த பிறகே, மேகங்களுக்கு ஊடாகத் தென்படும். மேகங்கள் படியாத நாட்களில் அடிவானத்தை ஒட்டி செவ்வட்டம் புலனாகும்.

இப்போது 6-30க்குத் தான் சூரியன் மேலே வருகிறது. இனி போகப் போக, 5-25, 6-20, 5-15 என்று சீக்கிரமாகவே உதய நேரம் அமையும். அப்போது 5 மணிக்கெல்லாம் நல்ல வெளிச்சம் வந்துவிடும். இப்போதே வெயில் மிகக் கடுமையாகிவிட்டது.

வயல்கள் பெரும்பாலும் அறுவடையாகி விட்டன. மீதம் கிடப்பவை மார்ச் இறுதிக்குள் அறுப்பாகிவிடும்.

வேறு விசேஷம் இல்லை.

அன்பு

శX!. శ్రీ,