பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

855 வல்லிக்கண்ணன்

அமைப்பு முறை கொண்டது மதுரை. 1940களில் கூட கோயில் சுத்தமாக, அமைதியாக, அழகிய சூழ்நிலைகளோடு விளங்கியது.

பிறகு ஜனப்பெருக்கம் அதிகமாகி, போக்குவரத்து வேகஇயக்க வாகனங்கள் மிகுந்து, நெருக்கடி மிக அதிகமாகி விட்டது. வீதிகள் குறுகலாகத் தோன்றுகின்றன. வீதிகளின் இருபுறமும் லாரிகள் வகையரா நிற்பது நடப்பவர்களுக்கு இடைஞ்சல். கோயிலில் கடைகள் அதிகமாகி, சுத்தமும் சுகாதாரமும் குறைந்து, கோயிலுக்குள் போவது மனஅமைதியைக் கெடுக்கும் காரியம் என்றாகி விட்டது.

டவுண்ஹால் ரோடு நெரிசலைத் தாங்க இயலாத அளவுக்கு இருக்கிறது. லாட்ஜுகள் நிறைய. கும்பலும் நெருக்கடியும் வெகு அதிகம். எப்பவும் கூட்டமும் மோதலும் தான். 1970களிலேயே இந்த நிலை. இது வரவர அதிகரித்துவிட்டது.

இப்போது மதுரையின் அழகு அமைப்பே தெரியவில்லை. ஜனப்பெருக்கம் மிகுந்த, போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்ட, அழுக்குகளும் அசிங்கங்களும் பெருத்துப்போன, மற்றுமொரு நாகரிகப் பெருநகரமாகத் தான் அதுவும் தென்படுகிறது.

நகரின் துரத்துச் சிறு தெருக்களில் கூட லாரி, பஸ், கார்கள் வகையராவின் தொல்லைதரும் ஒட்டங்கள் அதிகரித்து விட்டதனால், அமைதியாக - ஆனந்தமாக நடந்துபோகவே இயலவில்லை.

நாகரிக வளர்ச்சியோடு நகரங்கள் பல வசதிகள் பெற்றிருந்தாலும், அமைதியையும் சந்தோஷத்தையும் சுகாதாரத்தையும் சிதைக்கின்ற சீர்குலைவுகளும் அங்கே வளர்ந்து விடுகின்றன.

அன்பு

శ, టి.

ராஜவல்லிபுரம் 21-7-36 அன்புள்ள ராதா, உன் கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். , டைப்ரைட்டிங்கில் 1 கிளாசில் பாஸ் பண்ணியுள்ளதை அறிய சந்தோஷம். பாராட்டுக்கள்.

புத்தகங்கள் வாங்கி, கல்லூரிப் படிப்பில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளது சந்தோஷம் தருகிறது.