பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் $57

சென்னையில் எப்போதாவது மழை பெய்கிறது. இந்தப் பக்கம் எல்லாம் மழையே கிடையாது. படு வறட்சி. பெரும் காற்றுத் தான். காற்று என்றால் - திருநெல்வேலி ஜில்லாவில் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் விடாது அடிக்கிற பேய்க்காற்று மாதிரியான பெரும்காற்று இதர பகுதிகளில் இராது. மதுரைக்குத் தெற்கே பலத்த மேல் திசைக்காற்று (மேல்காற்று- மேகாத்து) ஆக ஆரம்பித்து, இந்தப் பக்கத்தில் வலுப்பெறுகிறது. ஒவ்-ஊவ் என்று இரைச்ச லிட்டுக் கொண்டு இரவு பகலாக அடிக்கும்.

தெருவில் போகிறவர்களை, தள்ளிக்கொண்டு போகும். காற்றை எதிர்த்து வருகிறவ்ாகளை சிரமப்படுத்தும் உடைகளை கண்டபடி குலைத்து பெண்களையும் ஆண்களையும் சங்கடப்படுத்தும், ஆடியில் காற்று பலம் பெறுகிறது. -

'ஆடிக் காற்றில் அம்மியும் மிதக்கும் என்பது பழமொழி. சில ஊர்களில், உயரமான குளக்கரை அல்லது மேடுகள் மீது நடந்துபோகிற ஒல்லிநபர்களைத் துக்கி, கள்ளிப்புதரிலும் கண்டகண்ட இடங்களிலும் தள்ளிப் போடும். ஒலைக்கட்டு, கூடை முதலியன சுமந்து வருகிறவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். நேராக நடக்க முடியாது. காற்று வீசுகிற திசைக்கு எதிராகச் சாய்ந்து சரிந்து அவர்கள் நடப்பது, பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். வானத்தில் பறக்கிற காக்கைகள் காற்றில் அல்லாடுவதையும், பருந்துகள் தாழ்ந்தும் தணிந்தும், லாவகமாக Balace பண்ணி பறப்பதையும் சகஜமாகக் கானலாம்.

காற்று எங்கும் புழுதியையும் தூசியையும் கொண்டு சேர்க்கும். ஆற்றில் தண்ணிர் குறைவாகத்தான் போகிறது. காலையில் ஜில்-ஜிலீர் என்று குளிர்ந்து கிடக்கிறது. மாலை வேளைகளில் கூட குளிர்ச்சியாகத் தான் இருக்கிறது.

எழும்பூர் ரயில் நிலையம் பற்றி எழுதியிருந்தாய். திருநெல்வேலி ஜங்ஷன் ஸ்டேஷனை நீங்கள் எல்லோரும் 1977ல் பார்த்தது. அதன் பிறகு அந்தக் கட்டிடமும், அதைச் சுற்றியுள்ள இடங்களும் மாபெரும் மாற்றங்களை - புதுமைத் தோற்றங்களை . பெற்றுவிட்டன. ஜங்ஷன் பகுதி புதுநகரம் மாதிரி வளர்ந்துள்ளது. எத்தனை எத்தனை லாட்ஜுகள்! பெரியபெரிய கட்டிடங்கள்!

இந்தப் பக்கத்து மாறுதல்களையும், ஊர்களையும் நீங்கள் எல்லோரும் எந்தக் காலத்தில் பார்க்க முடியப் போகிறதோ இந்த நினைப்பு என்னுள் என்றும் உண்டு.

நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பதை அறிய சந்தோஷம்.

அன்பு

శ. 45,