பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 29

தொண்டுபுரிவதை நேர்மை, நீதி, உரிமை, சத்திய உணர்வு பெற்றவர்கள் சமூகத்தில் (உயர்வது கிடக்கட்டும்) உயிர் வாழ்வதற்கே சிரமப்பட வேண்டியிருப்பதை எல்லாம் அருமையாக உள்ளது உள்ளபடி உங்கள் நாவல்களில் சித்திரிக்கிறீர்கள். ஊருக்குள் ஒரு புரட்சியிலும் இது வெளிப்படுகிறது.

'ஒரு கோட்டுக்கு வெளியே விரிவாக எழுதப்பட்டிருப்பதால் நயங்கள் பல கலந்து அதிகச் சுவை உடையதாக அமைந்துள்ளது. 'ஊருக்குள் ஒரு புரட்சி சில இடங்களில் கதைச் சுருக்கம் மாதிரி - தேவைப்படுகிற சம்பவங்களை நேரடியாகச் சொல்லி விடுகிற வெறும் நேரேஷன் ஆகக் காணப்படுகிறது.

இருப்பினும் ரசம் குறையவில்லை. நன்றாக இருக்கிறது. இதை புத்தகமாக வெளியிடலாம். வெளியிட வேண்டியது தான். திரைமறைவு நிகழ்ச்சிகளை - சகல மட்டங்களிலும் நிகழ்கிற சிறுமைகளை - அம்பலப்படுத்துகிற காரியம், துணிச்சலானது. வரவேற்கப்பட வேண்டியது.

நான் சந்திக்கிற இலக்கிய நண்பர்களிடமெல்லாம உங்கள் நாவல்கள், கதைகள் பற்றி சொல்லிவருகிறேன். ஒரு கோட்டுக்கு வெளியே பற்றி முக்கியமாக, -

தச்சநல்லூரில் ஒரு ஹெட்மாஸ்டர். ஒரு கோட்டுக்கு வெளியே ரேடியோ நாடகத்தை கேட்டு ரசித்தது பற்றி மகிழ்வோடு சொன்னார். அதன் கரு, அது எடுத்துச் சொன்ன செய்தி அவருக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. நாடகம் நன்றாக இருந்தது என்று பாராட்டினார்.

எனது வாழ்த்துக்கள்.

அன்பு

ராஜவல்லிபுரம். 13-10-80

அருமை நண்பர் சமுத்திரம் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் 5/5.10.80 கடிதம் 8-ம் தேதி கிடைத்தது. திருவனந்தபுரத்துக்குப் போன கடிதமும் முன்பே வந்துவிட்டது.

செய்திகள் அறிந்து மகிழ்கிறேன். உங்கள் கதை விகடன் பொன்விழா மலரில் வெளிவருவதை அறிய ரொம்ப சந்தோஷம்.